உலகம்
காசாவில் சிறுவர்கள் மீது துப்பாக்கிச்சூடு!

காசாவில் சிறுவர்கள் மீது துப்பாக்கிச்சூடு!
காசாவில் சிறுவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் இந்த குற்றத்தைப் புரிவதாக பலஸ்தீன தரப்பு தெரிவிக்கிறது.
சர்வதேச ஊடக நிறுவனமான பிபிசி வெளியிட்டுள்ள ஆய்வுகளின் தொகுப்பில் 95 சிறுவர்கள் அவ்வாறு இறந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
சிறுவர்கள் சுடப்படுவது பற்றிக் காசாவில் உள்ள மருத்துவர்களும் கவலை வெளியிட்டுள்ளனர்.
குறிப்பாகக் சிறுவர்கள் மீதான திட்டமிட்ட தாக்குதல் தடை செய்யப்பட்டவை மற்றும் அவை சர்வதேச சட்டங்களுக்கு எதிரானது என அங்கு பணிபுரியும் மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.
லங்கா4 (Lanka4)
அனுசரணை