இலங்கை
செம்மணிப் புதைகுழிகளை கண்டறிய இன்று ‘ஸ்கான்’

செம்மணிப் புதைகுழிகளை கண்டறிய இன்று ‘ஸ்கான்’
செம்மணி -சித்துப்பாத்தி இந்துமயானத்தில் இனங்காணப்பட்ட ப மனிதப் புதைகுழியில் இதுவரையில் 130 மனித என்புக்கூட்டுத்தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், மேலும் மனிதப்புதை குழிகள் உள்ளனவா என்பதைக் கண்டறியும் நடவடிக்கைகள் இன்று ஆரம்பிக்கப்படவுள்ளன.
செம்மணியில் தற்போது இரு மனிதப் புதைகுழிகள் கண்டறியப்பட்டு அகழ்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்தப் புதைகுழிகளில் தினமும் மனித என்புக்கூட்டுத்தொகுதிகள் அடையாளம் காணப்படுவதுடன், பல்வேறு சான்றுப் பொருள்களும் மீட்கப்படுகின்றன.
இந்தநிலையில், இந்த இரு மனிதப்புதைகுழிகளை விடவும் வேறு மனிதப் புதைகுழிகள் அந்தப் பகுதியில் உள்ளனவா என்பதைக் கண்டறிவதற்கு இன்று நவீன ஸ்கானர் மூலம் அந்தப் பகுதி ஆய்வுக்குட்படுத்தப்படவுள்ளது.
அதேவேளை, இந்த மனிதப் புதைகுழிகளில் இருந்து மீட்கப்பட்ட சான்றுப்பொருள்களை அடையாளம் காண்பதற்காக நாளை செவ்வாய்க்கிழமை அவை பொதுமக்களுக்குக் காட்சிப்படுத்தப்படவுள்ளன.