இலங்கை
செம்மணிப் புதைகுழிகளை பார்வையிடவுள்ள இ.ம.உ.ஆ.

செம்மணிப் புதைகுழிகளை பார்வையிடவுள்ள இ.ம.உ.ஆ.
செம்மணி – சித்துப்பாத்தி இந்து மயானத்தில் இனங் காணப்பட்டுள்ள மனிதப் புதைகுழிகளை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு இன்று நேரில் சென்று பார்வையிடவுள்ளது.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மூன்று ஆணையாளர்களும், இரண்டு பணிப்பாளர்களும், யாழ்ப்பாணம் பிராந்திய அலுவலக அலுவலர்களும் அடங்கிய குழுவினர் மனிதப்புதைகுழி பிரதேசத்துக்கு நேரடியாகச் செல்லவுள்ளனர் என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் தெரிவித்துள்ளார். இவர்கள் காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலக அதிகாரிகள், மனித உரிமைகளுக்கும் அபிவிருத்திகளுக்குமான நிலையத்தின் பிரதிநிதிகள் ஆகியோருடனும் சந்திப்புகளை மேற்கொள்ளவுள்ளனர்.