இலங்கை
செம்மணி மனித புதைகுழியில் ஆரம்பமான ஸ்கான் பரிசோதனை!

செம்மணி மனித புதைகுழியில் ஆரம்பமான ஸ்கான் பரிசோதனை!
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினர் இன்றைய தினம் செம்மணி மனித புதைகுழி பிரதேசத்தை பார்வையிட்டனர்.
அதன்போது புதைகுழி அகழ்வு பணிகளில் ஈடுபட்டுள்ளவர்கள் மற்றும் அங்கிருந்த துறைசார் நிபுணர்களுடன் கலந்துரையாடலிலும் ஈடுபட்டனர்.
இதேவேளை யாழ். அரியாலை செம்மணியில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழி பகுதியில் இன்று ஸ்கான் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
செம்மணி புதைகுழிகளில் நேற்று வரை 130 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 120 எலும்புக்கூடுகள் புதைகுழிகளிலிருந்து அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
இந்தப் புதைகுழிகளின் அருகே வேறு மனித புதைகுழிகள் இருக்கின்றனவா என்று ஆராய ஸ்கான் பரிசோதனை தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.