பொழுதுபோக்கு
டி-சர்ட்டுக்குள் சென்ற கை; ‘அப்பாவிடம் சொல்லவில்லை’: பஸ் பயணத்தில் ஆண்ட்ரியாவின் மோசமான அனுபவம்!

டி-சர்ட்டுக்குள் சென்ற கை; ‘அப்பாவிடம் சொல்லவில்லை’: பஸ் பயணத்தில் ஆண்ட்ரியாவின் மோசமான அனுபவம்!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை, பாடகி, டப்பிங் ஆர்ட்டிஸ்ட் என பன்முகங்களைக் கொண்டவர் ஆண்ட்ரியா ஜெரெமையா. கடந்த 2007 ஆம் ஆண்டு கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான ‘பச்சைக்கிளி முத்துச்சரம்’ என்ற நடிகர் சரத்குமாருக்கு ஜோடியாக நடித்து சினிமாவில் அறிமுகமானார். தனது முதல் படத்திலேயே 4 வயது குழந்தைக்கு அம்மா கேரக்டரில் நடித்து அசத்திய இவருக்கு அடுத்தடுத்து சரியான வாய்ப்புகள் கிடைக்காவில்லை. 3 ஆண்டுகள் கழித்து 2010 ஆம் ஆண்டு வெளியான ஆயிரத்தில் ஒருவன் படத்தில் நாயகியாக நடித்திருந்தார். கார்த்தி ரீமாசென் பார்த்திபன் ஆகியோர் நடிப்பில் வெளியான இந்த படம், வெளியானபோது வரவேற்பை பெறவில்லை என்றாலும், இப்போது பலரும் படத்தை பாராட்டி வருகின்றனர். அதன்பிறகு அஜித்துடன் மங்காத்தா, கமல்ஹாசனுடன் விஸ்வரூபம், அரண்மனை, இது நம்ம ஆளு, உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.ஆண்ட்ரியா நாயகியாக நடித்த படங்களை விட, அவர் முக்கிய கேரக்டரில் நடித்த படங்கள் பெரிய வெற்றிப்படங்களாக அமைந்துள்ளது. அந்த வகையில் விஷால் நடிப்பில் வெளியான துப்பறிவாளன், வெற்றிமாறனின் வட சென்னை, விஜயின் மாஸ்டர், அரண்மனை 3, உள்ளிட்ட படங்கள் பெரிய வெற்றிப்படங்களாக அமைந்தது. இதன்பிறகு ஆண்ட்ரியா, மனுஷி, கா, பிசாசு 2, நோ என்ட்ரி, மாஸ்க் உள்ளிட்ட படங்களில் நடித்தார். இதேபோல், மலையாளத்தில் ‘அன்னையும் ரசூலும்’ (2013) மற்றும் தெலுங்கில் ‘தடகா’ (2013) போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.நடிகையாகப் புகழ் பெறுவதற்கு முன்பே, ஆண்ட்ரியா ஒரு பிரபலமான பின்னணிப் பாடகியாக இருந்தார். ஹாரிஸ் ஜெயராஜ், யுவன் ஷங்கர் ராஜா, அனிருத் ரவிச்சந்தர் போன்ற முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் பாடியுள்ளார். துப்பாக்கி படத்தில் வந்த கூகுள் கூகுள் பாடல் முதல், புஷ்பா படத்தில் வந்த ஊ சொல்றீயா மாமா பாடல் வரை பல பாடல்களை பாடியுள்ளார். இதேபோல், வேட்டையாடு விளையாடு முதல் விடா முயற்சி படம் வரை பல படங்களுக்கு டப்பிங் குரல் கொடுத்துள்ளார் ஆண்ட்ரியா. வெற்றிமாறனின் ஆடுகளம் படத்தில், நடிகை டாப்சிக்கும், நண்பன் படத்தில் நடிகை இலியானாவுக்கும் குரல் கொடுத்துள்ளார். இந்நிலையில், நடிகை ஆண்ட்ரியா தான் மேற்கொண்ட பஸ் பயணத்தின் போது தனக்கு ஏற்பட்ட மோசமான அனுபவம் குறித்து வெளிப்படுத்தி இருப்பார். அது தொடர்பான வீடியோ சமூக வலைதள பக்கத்தில் அதிகம் பகிரப்பட்டு வைராலகி வருகிறது. அந்த வீடியோவில் அவர், “எனக்கு கிட்டத்தட்ட 11 வயது இருக்கும். அப்போது நான் பேருந்தில் செல்லும் போது, எனது பின்புறம் ஒரு கைது இருப்பதாக உணர்ந்தேன். எனது அப்பா அருகில் அமர்ந்து இருந்ததால், அவரது கை பின்புறம் இருக்கலாம் என்று நினைத்தேன். அப்பறம் அந்தக் கை டி-சர்ட்டுக்குள் செல்கிறது. அப்பா உட்கார்ந்து இருந்த பக்கம் திரும்பி பார்த்தால், அவரின் கை அவரது மடியில் சேர்ந்தால் போல் இருக்கிறது. அந்த நேரத்தில் நான் என் அப்பா, அம்மாவிடம் எதுவுமே சொல்லவில்லை. நான் அப்படியே சீட்டில் இருந்து கொஞ்சம் முன்பக்கமாக தள்ளி உட்கார்ந்தேன். இதுபற்றி நான் ஏன் என் அப்பாவிடம் சொல்லவில்லை என்று எனக்கு தெரியாவில்லை. ஏதோ ஒன்று தப்பதாக நடக்கிறது என்பது எனக்கு தெரியாது. ஏன் ஒருவரின் கை எனது டி-சர்ட் மீது இருக்க வேண்டும்?” என்று ஆண்ட்ரியா கூறியிருப்பார்.