இலங்கை
மொத்த இளைஞர் சமுதாயத்துக்கே பேரிடி – நாமல் சீற்றம்!

மொத்த இளைஞர் சமுதாயத்துக்கே பேரிடி – நாமல் சீற்றம்!
அரசாங்கம் தேசிய இளைஞர் சேவைகள் சபையை அரசியலாக்கிவிட்டதாகவும், சுதந்திரமான இளைஞர் செயற்பாட்டை அடக்குமுறைக்கு உட்படுத்துவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குற்றஞ்சாட்டியுள்ளார்.
களுத்துறை மாவட்ட இளைஞர் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் பூர்ண சத்யஜித் கைது செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, எக்ஸ் வலைதளத்தில் பதிவொன்றை வெளியிட்ட அவர், இந்த கைது தெளிவான ஒடுக்குமுறை நடவடிக்கை எனக் கூறியுள்ளார்.
தேசிய இளைஞர் சேவைகள் சபையை அரசியலாக்குவது, நாட்டிலுள்ள மொத்த இளைஞர் சமுதாயத்துக்கும் பேரிடி என்றும் இதனை தாங்கள் கடுமையாக கண்டிப்பதாகவும் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த சம்பவம் ஒரே ஒருவரைதாக்குவது மட்டும் அல்ல எனவும் இலங்கையில் சுதந்திரமான இளைஞர் தலைமைத்துவத்தையே தாக்கும் செயல் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலையில், அரசாங்கம் சிவில்சமூக அமைப்புகள் மற்றும் சுயாதீன இளைஞர் அமைப்புகளில் அரசியல் தலையீட்டை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்திய ராஜபக்ச, “நாடு ஒரு ஜனநாயக, நியாயமான அமைப்பாக இருக்க வேண்டுமானால், இவ்வாறான தலையீடுகள் உடனடியாக நிறுத்தப்படவேண்டும்,” என்றார்.