இலங்கை
செம்மணி சான்று பொருட்களை பார்வையிட்ட 200க்கும் அதிகமானோர்

செம்மணி சான்று பொருட்களை பார்வையிட்ட 200க்கும் அதிகமானோர்
யாழ்ப்பாணம் செம்மணி சித்துபாத்தி மனித புதைகுழிகளில் இருந்து மீட்கப்பட்ட சான்று பொருட்களை சுமார் 200 பேர் வரையில் பார்வையிட்டருந்தனர்.
புதைகுழிகளில் இருந்து மீட்கப்பட்ட சான்று பொருட்கள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை மதியம் 1.30 மணி முதல் மாலை 05 மணி வரையில் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.
அவற்றை சுமார் 200 பேர் வரையில் பார்வையிட்டிருந்தனர்.
தனிமனிதனோடு தொடர்புடைய சான்று பொருட்களை காட்சிப்படுத்தப்பட்டது.
இனிவரும் காலங்களிலும் தனிமனிதனோடு தொடர்புடைய சான்று பொருட்கள் மீட்கப்பட்டால் அவற்றையும் காட்சிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.