இலங்கை
தேசிய பாதுகாப்பில் குறைபாடு இல்லை; அமைச்சர் விஜித ஹேரத் தெரிவிப்பு!

தேசிய பாதுகாப்பில் குறைபாடு இல்லை; அமைச்சர் விஜித ஹேரத் தெரிவிப்பு!
தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக பாதுகாப்புசபை ஜனாதிபதி தலைமையில் ஒவ்வொரு வாரமும் தவறாமல் கூடி உரிய நடவடிக்கைகளை எடுத்துவருகிறது என்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பில் எவரும் அஞ்சத்தேவையில்லை என்றும் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது-
பாதாள உலகக் குழுக்கள் இன்று, நேற்று தோன்றியவை அல்ல. அவை அரசியல்வாதிகளின் உதவியுடன் நீண்டகாலமாக இயங்குகின்றன. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கவே நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம். அவை ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ள போதிலும் முற்றாக முடிவுக்கு வரவில்லை. போதைபொருள் வியாபாரத்துடன் இணைந்ததாகவே பாதாளக் குழு செயற்பாடுகள் உள்ளன. தேசிய பாதுகாப்புத் தொடர்பில் நாம் வெளியே பேசிக்கொண்டு இருப்பதில்லை. எடுக்கவேண்டிய தருணத்தில் உரிய நடவடிக்கைகளை எடுத்துவருகிறோம் – என்றார்.