இலங்கை
கிளிநொச்சியில் சுகாதார அமைச்சின் வாகனம் மோதி ஒருவர் பலி

கிளிநொச்சியில் சுகாதார அமைச்சின் வாகனம் மோதி ஒருவர் பலி
கிளிநொச்சியில் சுகாதார அமைச்சின் வாகனம் மோதியதில் திருகோணமலையை சேர்ந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார் .
யாழ்ப்பாணம் – கண்டி நெடுஞ்சாலையில் , கிளிநொச்சி பழைய மாவட்ட செயலகம் முன்பாக நேற்றைய தினம் இரவு வீதியை கடக்க முற்பட்டவர் மீது , யாழ்ப்பாணத்தில் இருந்து பயணித்த சுகாதார அமைச்சுக்கு சொந்தமான வாகனம் மோதியுள்ளது.
விபத்தில் 55 வயதான திருகோணமலையைச் சேர்ந்தவரே உயிரிழந்துள்ளார்.
விபத்து சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.