பொழுதுபோக்கு
தனுஷுடன் டேட்டிங் வதந்தி; கெட்ட கண் ரொம்ப ஆபத்து: தனது கேரக்டர் பற்றி மனம் திறந்த மிருணாள் தாக்கூர்

தனுஷுடன் டேட்டிங் வதந்தி; கெட்ட கண் ரொம்ப ஆபத்து: தனது கேரக்டர் பற்றி மனம் திறந்த மிருணாள் தாக்கூர்
இந்திய சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மனைவி ஐஸ்வர்யாவை பிரிவதாக அறிவித்திருந்த நிலையில், தற்போது அவர் நடிகை மிருணாள் தாக்கூருடன் டேட்டிங்கில் இருப்பதாக தகவல்கள் பரவி வருகிறது. இது குறித்து மிர்ணாள் தாக்கூரே விளக்கம் அளித்துள்ளார்.இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்: பிரபல பாலிவுட் நடிகை மிருணாள் தாக்கூர், சமீபத்தில் அஜய் தேவ்கனுடன் இணைந்து நடித்த சன் ஆஃப் சர்தார் 2 படத்தின் வெற்றியை உற்சாகமாகக் கொண்டாடி வருகிறார். இந்த கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, அவர் ஒரு நேர்காணலில் தனது வாழ்க்கைப் பாதையைப் பற்றியும், திரைத்துறையில் தனது மனநிலையை எப்படி நேர்மறையாக வைத்திருக்கிறார் என்பது பற்றியும் மனம் திறந்து பேசியுள்ளார்.இந்த நேர்காணலில், அவர் பேசிய ஒரு விஷயம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது – அதுதான் ‘கெட்ட கண்’ எனப்படும் தீய கண் பார்வை மீதான அவரது நம்பிக்கை. ‘இன்ஸ்டன்ட் பாலிவுட்’ உடனான ஒரு உரையாடலில், மிருணாள் தனது எதிர்காலத் திட்டங்கள் பற்றிப் பேசினார். ஆனால், அவற்றை வெளிப்படையாகப் பேச அவர் விரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.”எனது திரையுலக வாழ்க்கையில் இன்னும் நிறைய விஷயங்கள் செய்ய வேண்டியுள்ளது. நிறைய இலக்குகளை நான் அடையவில்லை. ஆனால், நான் அதைச் செய்து முடித்த பிறகுதான் அதைப் பற்றிப் பேசுவேன். அதைச் செய்வதற்கு முன் பேசுவதால், அது கெட்டுப்போகக் கூடாது. நான் கெட்ட கண் விஷயத்தை நம்புகிறேன், கெட்ட கண் விஷயங்களைக் கெடுத்துவிடும். ஒருவர் தன்னைப் பற்றிப் பேசுவதற்கு முன் சிந்திக்க வேண்டும். நீங்கள் உலகிற்கு எவ்வளவு சொல்கிறீர்கள் என்பதை நீங்கள் கட்டுப்படுத்த வேண்டும்.சில நேரங்களில் நாம் செய்ய விரும்பும் அல்லது தற்போது செய்து கொண்டிருக்கும் விஷயங்களைப் பற்றிச் சொல்லி, நாமே அதை கெடுத்துக் கொள்கிறோம். எனக்கு ஒரு வித்தியாசமான ஆளுமை உள்ளது. சிலர் அடுத்த ஆண்டு எத்தனை படங்கள் வெளிவருகின்றன என்பதைப் பற்றிப் பேசலாம். நான் அதைப் பற்றிப் பேச விரும்பவில்லை; என்ன வருகிறது, என்ன வரவில்லை என்பது அனைவருக்கும் தெரியும். என் வாழ்க்கையில் நடக்கும் விஷயங்களைப் பற்றி நான் தொடர்ந்து சிந்திப்பதையோ, பேசுவதையோ விரும்புவதில்லை என தெரிவித்துள்ளார்.மேலும், மக்கள் என்னிடம் எனது வேலை பற்றியும், அழுத்தங்களை நான் எப்படிச் சமாளிப்பது என்றும் கேட்கிறார்கள். ஆனால் எனக்கு அப்படி எந்த அழுத்தமும் இல்லை. நான் ஒரு நேர்மறை எண்ணம் கொண்ட பெண், எனவே நான் அதற்காகச் செயல்பட வேண்டியதில்லை. ஒரு திரைப்படம் வெளியாவதற்கு முன்புகூட எனக்கு பதட்டமோ, அழுத்தமோ ஏற்படுவதில்லை,” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.இதற்கிடையில், நடிகர் தனுஷுடன் மிருணாள் ஒரு விருந்தில் கலந்துகொண்டது அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்த வதந்திகள் பரவ காரணமாக இருந்துள்ளது. அதேபோல் சன் ஆஃப் சர்தார் படத்தின் ஸ்கிரீனிங்கிலும் தனுஷ் கலந்து கொண்டது இந்த வதந்திகளுக்கு மேலும் கடுமையாக பரவிய நிலையில், இருவரும் ஒருவரையொருவர் காதலிப்பதாகக் கூறப்படுகிறது, ஆனால் அவர்கள் இருவருமே இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக எதையும் தெரிவிக்கவில்லை. தனுஷ் தனது மனைவி ஐஸ்வர்யாவை, 2024-ல் பிரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.