வணிகம்
லாட்டரி விலை ரூ. 500… பரிசு ரூ. 25 கோடி: ஓணம் பம்பர் குலுக்கல் எப்போது தெரியுமா?

லாட்டரி விலை ரூ. 500… பரிசு ரூ. 25 கோடி: ஓணம் பம்பர் குலுக்கல் எப்போது தெரியுமா?
கேரளாவில் சமீபத்தில் மான்சூன் பம்பர் லாட்டரி குலுக்கல் முடிவடைந்த நிலையில், லாட்டரி பிரியர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் ஓணம் பம்பர் லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனை தொடங்கியுள்ளது. மொத்தமாக ரூ.125.4 கோடிக்கு பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளதால், லாட்டரி பிரியர்கள் மத்தியில் டிக்கெட் விற்பனை அனல் பறந்து வருகிறது. முதல் பரிசு அடித்தால் வாழ்நாளில் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு திருப்பம் ஏற்பட்டு விடும் என்று பகல் கனவு காணும் லாட்டரி பிரியர்கள் இந்த டிக்கெட்டினை போட்டி போட்டு வாங்குவதை பார்க்க முடிகிறது.பம்பர் பரிசுகளின் விவரங்கள்:முதல் பரிசு: ரூ.25 கோடி (ஒரு டிக்கெட்டுக்கு)இரண்டாம் பரிசு: தலா ரூ.1 கோடி (20 டிக்கெட்டுகளுக்கு)மூன்றாம் பரிசு: தலா ரூ.50 லட்சம் (20 டிக்கெட்டுகளுக்கு)நான்காம் பரிசு: தலா ரூ.5 லட்சம் (10 டிக்கெட்டுகளுக்கு)ஐந்தாம் பரிசு: தலா ரூ.2 லட்சம் (10 டிக்கெட்டுகளுக்கு)ஆறாம் பரிசு: ரூ.5 ஆயிரம் (கடைசி 4 இலக்கங்களுக்கு)லாட்டரி டிக்கெட் விலை: ரூ.500அச்சிடப்பட்ட டிக்கெட்டுகள்: 90 லட்சம்குலுக்கல் தேதி: 27.09.2025 (சனிக்கிழமை)வழக்கம் போல பாலக்காட்டில் ஓணம் பம்பர் லாட்டரி டிக்கெட்டுகளை ஆர்வத்துடன் லாட்டரி பிரியர்கள் வாங்கி செல்வதை பார்க்க முடிகிறது. மொத்தம் 90 லட்சம் டிக்கெட்டுகளை அச்சிட கேரள லாட்டரித்துறை முடிவு செய்துள்ளது. இந்த டிக்கெட்டிற்கான குலுக்கல் 27.09.2025 (சனி) நடைபெறுகிறது. வரி, கமிஷனுக்குப் பின் கிடைக்கும் தொகை: முதல் பரிசு வெல்பவருக்கு சுமார் ரூ.15 கோடி கையில் கிடைக்கும். லாட்டரி விற்பனை மூலம் கேரள அரசுக்கு ரூ.300 கோடிக்கு மேல் வருமானம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குலுக்கலுக்கு இன்னும் 2 மாதங்கள் இருக்கும் போதே டிக்கெட் விற்பனை களைகட்டியுள்ளது, இது ஓணம் பம்பர் லாட்டரியின் மீதான எதிர்பார்ப்பைக் காட்டுகிறது.