இந்தியா
இந்தியா-அமெ.இடையான வர்த்தகப் பேச்சுகள் இரத்து!
இந்தியா-அமெ.இடையான வர்த்தகப் பேச்சுகள் இரத்து!
இந்தியா மற்றும் அமெரிக்காவுக்கு இடையே இந்த மாதம் முன்னெடுக்கப்பட இருந்த வர்த்தகப் பேச்சு வார்த்தைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
எதிர்வரும் 25ஆம் திகதி முதல் 29ஆம் திகதி வரையான காலப்பகுதியில், இந்தியாவின் புதுடில்லிக்கு அமெரிக்கப் பிரதிநிதிகள் மேற்கொள்வதற்குத் திட்டமிடப்பட்டிருந்த பயணம் இரத்துச் செய்யப்பட்டுள்ளது என்று கூறப்படுகின்றது.
முன்மொழியப்பட்ட வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகளைத் தாமதப்படுத்தல் மற்றும் இந்தியப் பொருள்களுக்கான மேலதிக வரிக்கு எதிர்வரும் 27ஆம் திகதிக்கு முன்னதாக, அமெரிக்காவினால் நிவாரணம் வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு தகர்க்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்தப் பயணம் இரத்துச் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.[ஒ]
