இலங்கை
கிளிநொச்சியில் விபத்து – பெண் பலி!
கிளிநொச்சியில் விபத்து – பெண் பலி!
கிளிநொச்சி அக்கராயன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கராயன் பிரதான வீதியில் 05 வது மைல் கல் அருகில் இன்று இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இயக்கச்சியை சேர்ந்த சிரிகரன் சுபாங்கி 44 வயதுடைய பெண் ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்தவராவார்.
குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்
முறிகண்டிப் பகுதியிலிருந்து முழங்காவில் நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிளுடன் எதிரே வந்த கார் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது
உயிரிழந்த பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணையை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
