Connect with us

இந்தியா

பழனியில் 23 வயது இளைஞரை அடித்துக் கொன்ற 16 வயது சிறுமி

Published

on

Loading

பழனியில் 23 வயது இளைஞரை அடித்துக் கொன்ற 16 வயது சிறுமி

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே தும்பலப்பட்டி கிராமத்தில் செங்கல் சூளை உள்ளது. இந்த செங்கல் சூளையில் அதே பகுதியை சேர்ந்த 23 வயது சரவணன் என்ற இளைஞர் கணக்காளராக வேலை செய்து வந்தார்.

இதனிடையே, நேற்று முன் தினம் இரவு செங்கல் சூளைக்கு சென்ற வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் செங்கல் சூளைக்கு சென்று பார்த்தனர். அப்போது அங்கு சரவணன் காதில் ரத்தம் வடிந்த நிலையில் சடலமாக கிடந்துள்ளார்.

Advertisement

இது குறித்து தகவலறிந்த போலீசார், விரைந்து சென்று சரவணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். முதற்கட்ட விசாரணையில் சரவணன் அடித்துக்கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

இந்நிலையில், சரவணன் அடித்துக்கொன்றது அதே செங்கல் சூளையில் வேலை செய்துவந்த 16 வயதான வடமாநில சிறுமி என்பது தெரியவந்து. செங்கல் சூளையில் வேலை செய்துவந்த வடமாநில தொழிலாளியான கோபால் என்பவரின் மகளான 16 வயது சிறுமி சரவணனை அடித்துக்கொன்றுள்ளார்.

மேலும், இந்த கொலையை மறைக்க சிறுமியின் தந்தையான கோபால் மற்றும் சிறுமியின் 14 வயது சகோதரி ஆகியோரும் உடந்தையாக இருந்துள்ளனர். இதையடுத்து, கோபால் மற்றும் அவரது மகள்களான 2 சிறுமிகளையும் போலீசார் கைது செய்துள்ளனர். சரவணனை வடமாநில சிறுமி கொலை செய்ததற்கான காரணம் குறித்து இதுவரை தகவல் இதுவரை வெளியாகவில்லை.

Advertisement

லங்கா4 (Lanka4)

அனுசரணை

images/content-image/1754511373.jpg

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன