இலங்கை
யாழ்ப்பாணத்தில் நேற்று வெப்பம் அனல் நிலை!
யாழ்ப்பாணத்தில் நேற்று வெப்பம் அனல் நிலை!
எச்சரிக்கை மட்டத்தைத் தொட்டது இன்று மேலும் எகிறும் அபாயம்
யாழ்ப்பாணம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று வெப்பநிலை உக்கிரமாக இருந்தது என்றும், எச்சரிக்கை மட்டத்தைத் தொட்டது என்றும் யாழ்ப்பாணம் மாவட்ட இடர் முகாமைத்துவ பிரிவின் பிரதிப்பணிப்பாளர் ரி.என்.சூரிய ராஜா தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக வெப்பநிலை உக்கிரம் பெற்றுள்ளது. இதன் உச்சக்கட்டமாக இன்று (நேற்று) எச்சரிக்கை மட்டத்தைத் தொட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக நாளையும் (இன்றும்) வெப்பநிலை உக்கிரமாகவே இருக்கும். எனினும் அடுத்த 36 மணிநேரத்துக்குப் பின்னர் பரவலாக மழைக்குச் சாத்தியங்கள் காணப்படுகின்றன – என்றார்.
