இலங்கை
ரணிலுக்கு பிணை கிடைக்கும்! முக்கிய அரசியல் பிரபலம் வெளியிட்ட தகவல்
ரணிலுக்கு பிணை கிடைக்கும்! முக்கிய அரசியல் பிரபலம் வெளியிட்ட தகவல்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு இன்று நிச்சயமாக பிணை கிடைக்கும் என்று பிரபல அரசியல்வாதியும் சட்டத்தரணியுமான லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ரணிலுக்கு எதிரான வழக்கு தற்போது கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் அழைக்கப்பட்டுள்ள நிலையில், நீதிமன்ற வளாகத்தில் பெருமளவான அரசியல்வாதிகள் ஒன்று திரண்டுள்ளனர்.
இந்த நிலையில், கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்ற வளாகத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே லக்ஸ்மன் கிரியெல்ல மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும் தெரிவிக்கையில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இருந்து விசாரணைக்கு அழைப்பு விடுக்கப்பட்ட எல்லா சந்தர்ப்பங்களிலும் முன்னாள் ஜனாதிபதி சென்று வாக்குமூலமளித்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்கவுக்கு பிணை கிடைக்கும் என்று நான் நிச்சயமாக நம்புகின்றேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
