Connect with us

சினிமா

அப்பா பெங்காலி ஏன் கற்றுக்கொண்டார் தெரியுமா.? உண்மையை உடைத்த ஸ்ருதி ஹாசன்..!

Published

on

Loading

அப்பா பெங்காலி ஏன் கற்றுக்கொண்டார் தெரியுமா.? உண்மையை உடைத்த ஸ்ருதி ஹாசன்..!

இந்திய சினிமா வரலாற்றில் நடிக்க, இயக்க மற்றும் பாடத் தெரிந்தவர்கள் சிலர் மட்டுமே இருக்கிறார்கள். அந்த லிஸ்டில் முதலிடத்தில் இடம் பெறும் நபர் தான் உலக நாயகன் கமல்ஹாசன். அவர் பற்றிய தகவல்கள் பலருக்கும் தெரிந்தவையாக இருக்கலாம். ஆனால், அவரது வாழ்க்கையின் சில ஆழமான, நெகிழ்ச்சியான மற்றும் காதல் நிறைந்த தருணங்களை அவர் வெளிப்படையாக பகிர்ந்ததில்லை.இந்நிலையில், சமீபத்தில் ஒரு நேர்காணலில், கமல்ஹாசனின் மகளும், பிரபல நடிகையுமான ஸ்ருதி ஹாசன், தனது தந்தை பற்றிய ஒரு அதிர்ச்சி அளிக்கும் தகவலை பகிர்ந்துள்ளார். அது அவரது ரசிகர்களையும் சினிமா உலகத்தையும்  ஆச்சரியப்பட வைத்துள்ளது.ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக வழங்கிய பேட்டியில் ஸ்ருதி ஹாசன், தனது தந்தை பற்றி பேசும்போது, அவர் மொழிகள் கற்றுக்கொள்வதில் காட்டும் ஆர்வத்தை நினைவுகூர்ந்தார். அதன்போது ஸ்ருதி ஹாசன், “அப்பா எல்லா மொழிகளையும் சீக்கிரமா கற்றுக்கொள்வார். அவர் பெங்காலி படத்தில் கூட நடித்திருக்கிறார்.” என்றார்.அதன் போது, “அவர் பெங்காலி படத்தில் நடித்தது OK… ஆனா அவர் பெங்காலி எப்படி கற்றுக்கொண்டார்?” என்று கேள்வியெழுப்பப்பட்டது. இதற்கு ஸ்ருதி மிக நேர்மையான பதிலை அளித்தார். அதாவது,”அவருக்கு அப்போ அபர்ணா சென் மேல லவ். அவங்களை இம்ப்ரெஸ் பண்ணுறதுக்காகத்தான் அவர் பெங்காலி மொழியை முழுமையாக கற்றுக்கொண்டார்.மற்றபடி படத்துக்காக எல்லாம் இல்ல. அதனால் தான் “ஹே ராம்” படத்தில் ராணி முகர்ஜி பெயர் அபர்ணா. இப்போ கனெக்சன் பண்ணிக்கோங்க.” என்று கூறியுள்ளார் ஸ்ருதி. 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன