சினிமா
ஒரே வாரத்தில் மல்லாக்க படுத்த கூலி வசூல்.. சன் பிக்சர்ஸ் போட்ட பலே திட்டம்
ஒரே வாரத்தில் மல்லாக்க படுத்த கூலி வசூல்.. சன் பிக்சர்ஸ் போட்ட பலே திட்டம்
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூட்டணியில் கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியான திரைப்படம் தான் கூலி. இந்த படம் தமிழில் சினிமா வரலாற்றிலேயே முதல் நாளில் 151 கோடிகளை வசூலித்த முதல் படம் என்ற சாதனையை படைத்திருந்தது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் அமீர்கான், நாகார்ஜுனா, உபேந்திரா, சத்யராஜ், சௌபின் சாஹிப், ஸ்ருதிஹாசன் என முக்கியமான முன்னணி நடிகர்கள் நடித்து அனிருத் இசையில் வெளியான கூலி திரைப்படம் முதல் வாரம் வசூலில் வேட்டையாடியது . ஆனால் அடுத்தடுத்த நாட்களில் சரிவை சந்தித்துள்ளது.கூலி படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கியது தான் வசூலில் சரிவை சந்திக்க காரணம் என இதன் தயாரிப்பு நிறுவனம் உயர் நீதிமன்றத்திலும் மனு கொடுத்துள்ளது. மேலும் திடீரென வசூல் குறைய ஆரம்பித்ததால் சன் பிக்சர்ஸ் நிறுவனம் யு| ஏ சான்றிதழை பெறுவதற்கும் போராடி வருகின்றதாம்.மேலும் கூலி படத்தில் அதிக வன்முறை காட்சிகள் உள்ளது என ஆரம்பத்தில் கூறப்பட்டது. இதன் இரண்டாவது வாரத்தில் பெற்றோர்களுடன் குழந்தைகளை அழைத்து வருவதற்குரிய வேலைகளிலும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில், கூலி படத்தின் ஏழாவது நாள் வசூல் விபரம் வெளியாகி உள்ளது. அதன்படி உலக அளவில் மொத்தமாக 464 .5 கோடி ரூபாயை ஈட்டி உள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஆனாலும் இந்த வசூல் விவரம் போலி என்றும், சன் பிக்சர்ஸ் நிறுவனம் போலியாக போஸ்டர் வெளியிட்டு வருவதாகவும் நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
