இலங்கை
ஓகஸ்ட் மாதத்துக்கான முதியோர் கொடுப்பனவு
ஓகஸ்ட் மாதத்துக்கான முதியோர் கொடுப்பனவு
தென்மராட்சிப் பிரதேச அஞ்சல் அலுவலகங்களில் நேற்றுத் திங்கட்கிழமை முதல் ஓகஸ்ட் மாதத்துக்குரிய முதியோர் கொடுப்பனவு வழங்கப்படுகின்றது என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொடுப்பனவை எதிர்வரும் 29ஆம் திகதிக்கு முன்னர் பெற்றுக்கொள்ளுமாறு அஞ்சலகத்தினர் அறிவித்துள்ளனர். கடந்த வாரக் கொடுப்பனவுகளுக்கான பட்டியல் பிரதேசசெயலகத்துக்கு வந்தபோதிலும் அஞ்சல் அலுவலகப் பணியாளர்களின் பணிப்புறக்கணிப்புக் காரணமாக அஞ்சல் அலுவலகங்களுக்கு அனுப்பப்படவில்லை. தற்போது அஞ்சல் பணியாளர்கள் கடமைக்குத் திரும்பியதையடுத்து கொடுப்பனவுக்கான பட்டியல் அஞ்சல் அலுவலகங்களில் கையளிக்கப்பட்டுள்ளன. அதையடுத்துக் கொடுப்பனவு வழங்கப்பட்டுவருகின்றது.
