Connect with us

இலங்கை

தேசிய மட்டப் போட்டியில் வரலாற்றுச் சாதனை படைத்த கிளிநொச்சி மாணவர்கள்

Published

on

Loading

தேசிய மட்டப் போட்டியில் வரலாற்றுச் சாதனை படைத்த கிளிநொச்சி மாணவர்கள்

தேசிய மட்டப் போட்டியில் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களைச் மாணவர்கள் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளனர்.

கொழும்பில் மாபெரும் UCMAS 2025 தேசிய மட்டப் போட்டி நடைபெற்றது.

Advertisement

இதில் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த UCMAS கல்வி நிலையத்தின் மாணவர்கள் பங்கு பற்றி வெற்றி பெற்றுள்ளனர்.

இந்தப் போட்டியானது கடந்த சனிக்கிழமை 23.08.2025 அன்று கொழும்பில் அலறி மாளிகையில் நடைபெற்றது.

அதன்போது கிளிநொச்சி கல்வி நிலையத்தின் மாணவன் ஏ. றகிநாத் கிராண்ட் சம்பியன் பெற்று சோழன் உலக சாதனை படைத்தார்.

Advertisement

மொத்தமாக 71 விருதுகளை வென்று, Bright Stars கல்வி நிலைய மாணவர்கள் தமது அபாரமான திறமையைக் காண்பித்துள்ளனர்.

குறித்த கல்வி நிலையத்தின் இயக்குநர் ராஜீவன் கூறுகையில், இந்த வெற்றியின் பின்னணியில் எங்கள் மாணவர்களின் கடின உழைப்பும், பெற்றோர்களின் அர்ப்பணிப்பும், ஆசிரியர்களின் வழிகாட்டுதலும் தான் முக்கியக் காரணம்.

இது கிளிநொச்சி, வட்டக்கச்சி, பரந்தன், மல்லாவி, தர்மபுரம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளுக்கும் பெருமை சேர்க்கும் வெற்றி எனக் குறிப்பிட்டார்.

Advertisement

இப்போட்டியில் பங்கேற்ற ஒவ்வொரு மாணவர்களும் சோழன் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ள மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.  

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன