இலங்கை
நீரில் மூழ்கி இரு இளைஞர்கள் மாயம்!
நீரில் மூழ்கி இரு இளைஞர்கள் மாயம்!
நாட்டின் இருவேறு பகுதிகளில் நீரில் மூழ்கி இரு இளைஞர்கள் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாவுல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட போவதென்ன நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற பிபில, வனமெதகம பகுதியைச் சேர்ந்த 27 வயதான இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி நேற்று (20) மாலை காணாமல் போயுள்ளார்.
நாவுல பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த இளைஞர் மேலும் இருவருடன் போவதென்ன நீர்த்தேக்கத்தில் நீராடிக் கொண்டிருந்த போது இந்த அனர்த்தம் இடம்பெற்றதாக நாவுல பொலிஸார் தெரிவித்தனர்.
இதற்கிடையில், அஹங்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அஹங்கம கடற்கரையில் நேற்று (20) நீராடச் சென்ற இளைஞர் ஒருவரும் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.
காணாமல் போனவர் வத்தளையைச் சேர்ந்த 24 வயதான இளைஞர் என தெரியவந்துள்ளது.
கடற்படை அதிகாரிகளின் உதவியுடன் நாவுல பொலிஸாரும் அஹங்கம பொலிஸாரும் காணாமல் போன இளைஞர்களைத் தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
