இலங்கை
புகையிரதக் கடவையைக்கோரி இந்திராபுரம் மக்கள் போராட்டம்
புகையிரதக் கடவையைக்கோரி இந்திராபுரம் மக்கள் போராட்டம்
பளை இந்திராபுரம் கிராமத்துக்கு நிரந்தர புகையிரதக் கடவையை அமைக்குமாறு கோரி எதிர்வரும் 2ஆம் திகதி ஜனாதிபதி பளைக்கு வரும் வேளையில் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுக்க கிராம மக்கள் தீர்மானித்துள்ளனர்.
பச்சிலைப்பள்ளிப் பிரதேசத்தில் வெடிபொருள்கள் அகற்றப்பட்டு கடந்த 2016ஆம் ஆண்டு மீள்குடியமர்வு இடம்பெற்று எட்டு ஆண்டுகள் கடந்த நிலையில் புகையிரதக் கடவை அமைத்துத்தரப்படவில்லை. ஜனாதிபதி, பிரதமர்,போக்குவரத்து அமைச்சர், மாகாண ஆளுநர் மற்றும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் பல தடவைகள் இதுதொடர்பில் முறையிட்ட போதிலும் இதுவரை தீர்வு கிடைக்கவில்லை. இந்த நிலையிலேயே குறித்த போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்தனர்.
