இலங்கை
மடுத் திருவிழாவையொட்டி நீர்கொழும்பிலிருந்து விசேட ரயில் சேவை!
மடுத் திருவிழாவையொட்டி நீர்கொழும்பிலிருந்து விசேட ரயில் சேவை!
மன்னார் மடுப்பெருவிழாவை முன்னிட்டு வழமையான கொழும்புக் கோட்டையிலிருந்து தலைமன்னாருக்கு இடம்பெற்றுவரும் ரயில் சேவையுடன் இம்முறை நீர்கொழும்பிலிருந்து மடுவுக்கு விசேட ரயில் சேவை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நாளை வெள்ளிக்கிழமை மன்னார் மடுத்திருவிழா இடம்பெறவுள்ளது. அதனை முன்னிட்டு பக்தர்களின் நலன்கருதி இந்த விசேட ரயில் சேவை ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது .
இந்த ரயில்சேவை நேற்றுப் புதன்கிழமை இரவு 9 மணிக்கு நீர்கொழும்பில் இருந்து ஆரம்பமாகியது திருவிழா முடிந்த பின்னர் மீண்டும் மாலை 4 மணிக்குப் புறப்பட்டு நீர்கொழும்புக்கு இரவு 22.50 மணிக்குச் சென்றடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, மொறட்டுவவில் இருந்தும் மடுமாதா திருத்தலத்துக்கு மற்றொரு ரயிலும் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
