பொழுதுபோக்கு
மேடையில் கலங்கிய அம்மா; முத்தம் கொடுத்து ஆறுதல் சொன்ன ரவி மோகன்: கலங்க வைத்த எமோஷனல் காட்சி!
மேடையில் கலங்கிய அம்மா; முத்தம் கொடுத்து ஆறுதல் சொன்ன ரவி மோகன்: கலங்க வைத்த எமோஷனல் காட்சி!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் ரவி மோகன். தற்போது வரை 30-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள அவர், தனது சிறப்பான நடிப்புக்காக ஏராளமான விருதுகளை வென்று அசத்தி இருக்கிறார். கடந்த 2003 ஆம் ஆண்டு வெளிவந்த ஜெயம் படத்தில் அறிமுகமான அவர் தனது பெயர் ஜெயம் ரவி என அழைக்கப்படுவதை தவிர்த்து, ரவி மோகன் என அழைக்கலாம் என விரும்பினார். இதனிடையே, நடிகர் ரவி அவரது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்ய விண்ணப்பித்திருக்கிறார். தனது மனைவி மற்றும் மகன்களை பிரிந்து வாழ்ந்து வருகிறார். மகன்களைத் தன்னிடம் கொண்டு வர கடைசி வரை போராடுவேன் என்று அவர் கூறியிருந்தார். தற்போது நடிகர் ரவி பாடகி கெனிஷா பிரான்சிஸ் உடன் நட்பு பாராட்டி வருகிறார். இருவரும் இணைந்து வசிப்பதாக கூறப்படும் நிலையில், நேற்று வெள்ளிக்கிழமை இருவரும் திருப்பதி ஏழுமலையானை தரிசினம் மேற்கொண்டார்கள். இந்நிலையில், நடிகர் ரவி மோகன், ரவி மோகன் ஸ்டூடியோஸ் என்கிற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். அதற்கான அறிமுக விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில், நடிகர்கள் கார்த்தி, சிவகார்த்திகேயன், சிவராஜ் குமார், எஸ்.ஜே சூர்யா, நடிகை ஜெனிலியா, ஸ்ரத்தா ஸ்ரீநாத் உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.இந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் ஒரே நேரத்தில் இரண்டு திரைப்படங்களை ரவி மோகன் தயாரிக்க உள்ளார். அதில், முதல் படமாக ரவி மோகன் இயக்குநர் கார்த்திக் யோகி இயக்கத்தில் நடிக்கிறார்.A post shared by Cineulagam (@cineulagamweb)ரவி மோகன் இயக்குநராக அறிமுகமாகவுள்ள படத்தின் பூஜை நடைபெற்றது. இப்படத்தின் நாயகனாக நடிகர் யோகி பாபு நடிக்கிறார். படத்திற்கு, ‘ஆன் ஆர்டினரி மேன்’ எனப் பெயரிட்டுள்ளனர். படத்திற்கான புரமோ படப்பிடிப்பும் முடிந்ததாக ரவி மோகன் தெரிவித்துள்ளார்.எமோஷனல் காட்சி A post shared by Cineulagam (@cineulagamweb)இதனிடையே, நடிகர் ரவி மோகனின் தாயாருக்கு விழா மேடையில் சர்ப்ரைஸ் கிப்ட் அளிக்கப்பட்டது. இதனை நடிகர் ரவி மோகன் வழங்கினார். அப்போது கெனிஷா பிரான்சிஸ் உடன் இருந்தார். சர்ப்ரைஸ் கிப்ட்டை பெற்றுக் கொண்ட ரவி மோகனின் தாயார், “சின்ன வயதில் நடக்கும் போது கீழே விழுந்து விடக்கூடாது என எண்ணி அவனை பிடித்தவள் நான், அவன் இல்லாம்மா” என்று கூறி கண்கலங்கினார்.
