பொழுதுபோக்கு
ரஜினிக்கு மகளா நடிக்காதே, ஹீரோயினா நடிக்க முடியாது; கமல் பட நடிகையை தடுத்த நண்பர்கள்; கடைசி வரை ஜோடி சேர முடியலையே!
ரஜினிக்கு மகளா நடிக்காதே, ஹீரோயினா நடிக்க முடியாது; கமல் பட நடிகையை தடுத்த நண்பர்கள்; கடைசி வரை ஜோடி சேர முடியலையே!
நடிகர் ரஜினிகாந்த் திரையுலகில் தனது 50வது ஆண்டை நிறைவு செய்துள்ள நிலையில், புதிய தலைமுறை சேனலில் பேட்டியளித்த நடிகை ஊர்வசி, ரஜினிகாந்த் குறித்து மனம் திறந்து பேசி உள்ளார். முதன்முதலில் ரஜினிகாந்தைப் பார்த்தபோது, அவர் புரூஸ் லீ போல ஸ்டைலான சண்டைக் காட்சிகள் போடும் நடிகர் என்று நினைத்ததாக ஊர்வசி கூறினார். சண்டைக் காட்சிகளில் எதிரிகளைப் பார்க்காமல் சண்டையிடும் அவரது ஸ்டைல் கவர்ந்ததாகக் கூறினார். பின்னர், சூப்பர்மேன் போல எதையும் செய்யக்கூடிய மாயசக்தி கொண்டவர் ரஜினிகாந்த் என்றும் அவர் ஒப்பிட்டார்.முள்லும் மலரும் போன்ற அவரது ஆரம்பகால படங்களில் அவர் நேச்சுரல் நடிகர் என்று ஊர்வசி விவரித்தார். நானும் ரஜினிதான் சினிமாவில் பேசும்போதெல்லாம் ஸ்பீடாகப் பேசுவேன் என்பதால், ‘பெண் ரஜினி’ என்று ரஜினிகாந்தே தன்னை அழைத்ததாகவும், அது தனக்குக் கிடைத்த மிகப்பெரிய பாராட்டு என்றும் ஊர்வசி தெரிவித்தார். ‘நல்லவனுக்கு நல்லவன்’ திரைப்படத்தில் ரஜினிகாந்தின் மகளாக நடிக்கும் வாய்ப்பு தனக்குக் கிடைத்ததாகவும், ஆனால் அப்போது சில நண்பர்கள், “நீ ரஜினிக்கு மகளாக நடித்தால், இனி ஹீரோயினாக நடிக்க முடியாது” எனத் தடுத்ததாகவும் ஊர்வசி தெரிவித்தார்.ஊர்வசிக்கு மிகவும் பிடித்த ரஜினிகாந்தின் படங்கள் ‘ஆறிலிருந்து அறுபது வரை’, ‘முள்லும் மலரும்’,’கை கொடுக்கும் கை’ ஆகியவையாகும். ரஜினியின் உடல் தோற்றத்தைப் பற்றி அவர் கவலைப்படுவதில்லை என்றும், தனது நரைத்த முடியுடன் அவர் பொதுவெளியில் செல்வதை மிகவும் பாராட்டுவதாகவும் ஊர்வசி கூறினார்.ரஜினிகாந்தின் நகைச்சுவை உணர்வை வெகுவாகப் பாராட்டிய ஊர்வசி, அவரது நகைச்சுவை தன் மகனைக்கூட சிரிக்க வைத்தது என்று குறிப்பிட்டார். கடைசியாக, ரஜினிகாந்த் இன்னும் 50 ஆண்டுகள் திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என தனது வாழ்த்துக்களைத் தெரிவித்து உள்ளார்.
