இலங்கை
ரணிலைக் காப்பாற்றுவதற்கு தலையிடவேண்டும் ட்ரம்ப்; போராட்டக்காரர்கள் வலியுறுத்து!
ரணிலைக் காப்பாற்றுவதற்கு தலையிடவேண்டும் ட்ரம்ப்; போராட்டக்காரர்கள் வலியுறுத்து!
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திடம் இருந்து, முன்னாள் ஜனாதிபதி ரணிலைக் காப்பாற்றுவதற்காக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தலையிட வேண்டும் என்று போராட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
ரணிலின் விடுதலையை வலியுறுத்தி, ஐக்கிய தேசியக் கட்சியின் ஒழுங்கமைப்பில் கோட்டை நீதிவான் நீதிமன்றத்துக்கு அருகாக நேற்றுப் போராட்டம் நடத்தப்பட்டது. ‘அநுரவே வீட்டுக்குச் செல்’ என்ற தொனிப்பொருளில் இடம்பெற்ற இந்தப் போராட்டத்தின் போதே, ரணிலுக்கு நீதி வழங்கும் வகையில் இந்த விடயத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தலையிடவேண்டும் என்று போராட்டக்காரர்கள் வலியுறுத்தினார்கள்.
