சினிமா
ஸ்ரீலீலா நடனத்திற்கு பின்னால் இந்த டாப் நடிகர் உள்ளார்.. தாய் பகிர்ந்த ஷாக்கிங் விஷயம்
ஸ்ரீலீலா நடனத்திற்கு பின்னால் இந்த டாப் நடிகர் உள்ளார்.. தாய் பகிர்ந்த ஷாக்கிங் விஷயம்
நடனம் மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த நட்சத்திரங்களில் ஒருவர் ஸ்ரீலீலா. கடந்த ஆண்டு வெளிவந்த புஷ்பா 2 திரைப்படத்தில் ஒரே ஒரு சிறப்பு பாடலுக்கு நடனமாடி அசத்தியிருந்தார்.தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வரும் இவர், தற்போது பராசக்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகவுள்ளார். அதே போல் பாலிவுட்டிலும் Aashiqui 3 படத்தின் மூலம் அறிமுகமாகவுள்ளார்.டோலிவுட்டில் நட்சத்திர கதாநாயகியாக இருக்கும் ஸ்ரீலீலா, ஒரு நடனக் கலைஞராக மாறியதற்கு ஜூனியர் என்.டி.ஆர்தான் காரணம் என்று அவரது அம்மா பேட்டி ஒன்றில் பேசிய விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.அதில், ” 1997-ல் லாஸ் ஏஞ்சல்ஸில் ஒரு விழாவில் ஜூனியர் என்.டி.ஆர் நடனமாடினார். நான் அங்கு சென்றிருந்தேன்.அப்போது அவரிடம் எனக்கு மகள் பிறந்தால் அவளை உன்னை போன்று நடனமாட வைப்பேன் என்று கூறினேன். அதேபோல் என் மகளை நடனக் கலைஞராக்கினேன்” என்று தெரிவித்துள்ளார்.
