Connect with us

இலங்கை

செம்மணிக்கு நீதிகோரிய போராட்டத்துக்கு ஆதரவு!

Published

on

Loading

செம்மணிக்கு நீதிகோரிய போராட்டத்துக்கு ஆதரவு!

தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம் தெரிவிப்பு

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் எதிர்வரும் 30ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ளநிலையில் செம்மணிப் போராட்டம் வலுப்பெற அதற்கு ஆதரவு வழங்குவதாக தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் யாழ். மாவட்ட இணைப்பாளர் இன்பம் அறிவித்துள்ளார்.

Advertisement

யாழ்.ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்; இந்தப் போராட்டம் வெற்றிபெற வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு. தமிழ் மக்கள் மத்தியில் இருக்கும் ஒற்றுமையீனங்கள் மற்றும் குளறுபடிகளால் தான் எந்தவொரு போராட்டமும் முழுமையான இலக்கை அடையாதிருப்பதற்குக் காரணமாக அமைகிறது. ஒற்றுமையின் பலத்தை ஒருநிலையில் கொண்டுசேர்க்க இணக்கப்பாடு எட்டப்பட்டதன் பின்னரே எமது அமைப்பு ஆதரவை வழங்குகின்றது. அந்தவகையில் நியாயமான போராட்டத்தைப் பொது அமைப்புகளும் மக்களும் இணைந்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்-என்றார்.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன