இலங்கை
தன் கடமையை சட்டம் செய்யும்; அமைச்சர் சமந்த தெரிவிப்பு
தன் கடமையை சட்டம் செய்யும்; அமைச்சர் சமந்த தெரிவிப்பு
போராட்டங்கள்மூலம் சட்டம் நடைமுறையாவதைத் தடுக்க முடியாது. சட்டம் தனது கடமையைச் செய்வது அரசியல் பழிவாங்கல் அல்ல என்று அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், போராட்டம் நடத்தும் உரிமை உள்ளது. அந்த ஜனநாயக உரிமையை மதிக்கின்றோம். அதேபோல நாட்டில் சட்டமும் தனக்குரிய கடமையைச் செய்யும். போராட்டம் மூலம் அதனைத் தடுக்க முடியாது. எவரையும் பழிவாங்கும் தேவைப்பாடு அரசாங்கத்துக்குக் கிடை யாது. சட்டத்தின் பிரகாரமே நடவடிக்கை கள் இடம்பெறும் – என்றார்.
