Connect with us

இலங்கை

நீதிக்கான போராட்டத்தில் தமிழர் தேசமாக திரள்வோம்

Published

on

Loading

நீதிக்கான போராட்டத்தில் தமிழர் தேசமாக திரள்வோம்

யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு

சர்வதேச நீதி கோரிய மாபெரும் போராட்டத்தில் வடக்கு – கிழக்கில் இருந்து தமிழர் தேசமாக அனைவரும் அணிதிரளவேண்டும் என்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது.

Advertisement

காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான நாளைமறுதினம் வடக்கு – கிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கவனவீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. அந்தப் போராட்டத்துக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஆதரவு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் யாழ்ப்பாணத்தில் நேற்று நடத்திய ஊடக சந்திப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
வடக்கு-கிழக்கு தமிழர்தாயக பகுதியிலே போர் ஆரம்பிக்கப்பட்டு தற்காலம் வரையிலும் பல்வேறுபட்ட ஆக்கிரமிப்புகளுக்கு தமிழர்தாயகம் முகங்கொடுத்து வருகின்றது. இந்தக் காலப்பகுதியிலே எமது பல உறவுகள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளதுடன் தொடர்ச்சியாக இன்றளவும் அவர்களது உறவினர்கள் அவர்களைத் தேடிக்கொண்டிருக்கின்றனர். அதில் நிறையத் தாய்மார்கள் இறந்தும் கூட இருக்கின்றனர். இன்றும் நம்மக்கள் வாழ்கின்ற நிலப்பகுதியில் திட்டமிட்ட நில ஆக்கிரமிப்புகள். சிங்கள பௌத்தமயமாக்கல், தமிழர்களுடைய பூர்வீகக் காணிகள் விடுவிக்கப்படாமை என அதிகார ரீதியாக தமிழ் மக்கள் தொடர்ந்தும் அடக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் வருகின்றமை எங்கள் மக்களுக்கான நீதி இந்த நாட்டில் தொடர் சவாலுக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றமையையே குறிக்கின்றது.

தமிழ் மக்கள் தங்கள் தாயக பகுதியில் அரசியல் கலாசார பொருளாதார ரீதி யாக ஒடுக்கப்படுவதையும் எமக்கான நீதி மறுக்கப்படுவதையும் நாம் உரத் துச் சொல்வதே போராட்டங்களின் தார் மீக நோக்கமாகும். இன்றளவும் தமிழர் நிலங்கள் இராணுவத்தின் ஆக்கிரமிப் புக்குள்ளேயே இருக்கின்றன. வலிகா மம் கிழக்கு காணிகள் இராணுவத்தின ரால் சுவீகரிக்கப்பட்டு விடுவிக்கப்படாத நிலையிலேயேளங்கள்மக்கள் தொடர்ந்து போராடிவருகின்றனர். யுத்தம் முடிந்து 16 ஆண்டுகள் கடந்தும் இன்றளவும் நீதிக்கான தவிப்புகள் தணியப்பட வில்லை. நாளைமறுதினம் சனிக்கிழமை வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் சங்கத்தினர் தங்கள் பிள்ளைகளைத் தேடி சர்வதேச நீதி விசாரணை கோரிப்போராட முனைந்துள்ளனர். எங்கள் நிலத்தினுடைய அரசியலைப் புரிந்து கொண்டு எங்கள் மக்களுக்காக காணாமல் ஆக்கப்பட்ட எங்களுடைய உறவுகளுக்காக போராட் டக்களத்துக்கு அனைவரும் ஒன்றுகூடிவர வேண்டும்- என்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன