இலங்கை
மன்னார் மருத்துவமனை தாரைவார்ப்பு; அபிவிருத்திக்குழுவில் தீர்மானமில்லை
மன்னார் மருத்துவமனை தாரைவார்ப்பு; அபிவிருத்திக்குழுவில் தீர்மானமில்லை
மன்னார் பொது மருத்துவமனையை மத்திய அரசின் கீழ் கொண்டுவருவதற்கு மன்னார் அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் தீர்மானமொன்று நிறைவேற்றுவதற்கு முயற்சியெடுக்கப்பட்டது.
எனினும் குறித்த முயற்சிக்கு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான து.ரவிகரன் மற்றும் ப. சத்தியலிங்கம் ஆகியோரால் மிகக்கடுமையான எதிர்ப்பு வெளியிட்டதையடுத்து அபிவிருத்திக்குழுவில் அந்தத் தீர்மானத்தை நிறைவேற்றும் முயற்சி கைவிடப்பட்டது. இருப்பினும் ரிசாத் பதியுதீன், செல்வம் அடைக்கலநாதன் உள்ளிட்ட ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மன்னார் பொது மருத்துவமனையில் வளப்பற்றாக்குறை காணப்படுவதாகவும், அந்த வளப் பற்றாக்குறைகளைத் தீர்க்க மாகாணசபை நட வடிக்கை எடுக்கவில்லை எனவும் குற்றச்சாட்டு முன்வைத்ததுடன் குறித்த மருத்துவமனை மத்திய அரசின்கீழ் கொண்டு வரப்படவேண்டுமென்றும் கருத்துகளைத் தெரிவித்தனர்.
