சினிமா
15 வருட காதலை கேக் வெட்டிக் கொண்டாடிய தம்பதிகள்..! இன்ஸ்டாவைக் கலக்கிய SK-யின் போட்டோஸ்.!
15 வருட காதலை கேக் வெட்டிக் கொண்டாடிய தம்பதிகள்..! இன்ஸ்டாவைக் கலக்கிய SK-யின் போட்டோஸ்.!
தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான சிவகார்த்திகேயன் மற்றும் அவரது மனைவி ஆர்த்தி, தங்கள் 15வது திருமண நாளை குடும்பத்துடன் மகிழ்ச்சியாகக் கொண்டாடி உள்ளார்கள். இந்த கொண்டாட்டத்தின் போது எடுத்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. அந்தக் கேக் வெட்டும் அழகிய தருணங்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.2008ம் ஆண்டு விஜய் டிவி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகத் திகழ்ந்த சிவகார்த்திகேயன், தனது திறமையால் ரசிகர்கள் மத்தியில் விரைவில் பிரபலமானார். அதனைத் தொடர்ந்து ஆர்த்தியை திருமணம் செய்து கொண்டார். இன்று, அவர்கள் தங்களது வாழ்க்கைப் பயணத்தில் 15 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறார்கள்.அந்த சிறப்பு நாளை குடும்பத்துடன் கேக் வெட்டி, குழந்தைகளுடன் இணைந்து கொண்டாடிய இந்த இனிய தருணம் அனைவரையும் நெகிழ வைக்கும் வகையில் உள்ளது. இந்த புகைப்படங்கள் இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வைரலாகி வருகின்றன.புகைப்படங்களில் சிவகார்த்திகேயனும், ஆர்த்தியும் குழந்தைகளுடன் இணைந்து கேக் வெட்டும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. எல்லாரும் சந்தோசத்துடன் இருப்பது அந்த தருணத்தின் உணர்வுகளை வெளிப்படுத்துகிறது.இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியான சில மணிநேரங்களுக்குள் ஆயிரக்கணக்கான லைக் மற்றும் கமெண்ட்ஸினைப் பெற்றுள்ளது.
