Connect with us

பொழுதுபோக்கு

ஒன்ஸ்மோர் கேட்ட விஜய் அப்பா, அவரை படப்பிடிப்புக்கு வராமல் தடுத்த எம்.ஜி.ஆர்: பழி வாங்கினாரா மக்கள் திலகம்?

Published

on

Screenshot 2025-08-29 184145

Loading

ஒன்ஸ்மோர் கேட்ட விஜய் அப்பா, அவரை படப்பிடிப்புக்கு வராமல் தடுத்த எம்.ஜி.ஆர்: பழி வாங்கினாரா மக்கள் திலகம்?

எஸ். ஏ. சந்திரசேகர் ஓர் இந்தியத் திரைப்பட இயக்குநரும், தயாரிப்பாளரும், எழுத்தாளரும், நடிகரும் ஆவார்.இவர் தமிழ்த் திரைப்பட நடிகர் விஜய்யின் தந்தையாவார். 1981 இல் வெளிவந்த சட்டம் ஒரு இருட்டறை திரைப்படத்தில் இயக்குநராக அறிமுகமாகி பின்னர் சமூகப் பின்னணியுள்ள படங்களை இயக்க ஆரம்பித்தார்.சந்திரசேகர், இராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டினம் அருகே உள்ள முத்துப்பேட்டை என்ற கிராமத்தில் பிறந்தார். அவரது தந்தை சேனாதிபதி பிள்ளை, இராமநாதபுரத்தில் உள்ள தங்கச்சிமடத்தில் தொடருந்துத் துறையில் வேலை செய்தார். இவர் வசதியுள்ள கிறித்தவ வேளாளர் குடும்பத்தைச் சேர்ந்தவர். பின்னாளில் கருநாடக இசைப் பாடகியான சோபாவை மணந்தார்.சந்திரசேகர், தற்போதைய தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய்யின் தந்தை ஆவார். தனது இயக்கத்தில் உருவான நாளைய தீர்ப்பு திரைப்படம் மூலமாக விஜயை முழுமையான கதாநாயகனாக அறிமுகப்படுத்தினார். விஜய்க்கு பிறகு, சந்திரசேகருக்கு வித்யா என்ற மகளும் இருந்தார்; ஆனால், அவர் இரண்டு வயதிலேயே காலமானார்.சந்திரசேகர் அரசு தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று சென்னையில் அரசு வேலைக்கு சேர்ந்தார். பின்னர், திரையுலகில் தனது பயணத்தை விஜயா வாஹினி ஸ்டூடியோவில் எம்ஜிஆர் நடித்த எங்க வீட்டு பிள்ளை திரைப்படத்தில் சவுண்ட் இன்ஜினியராகத் தொடங்கினார். பின்னாளில் இயக்குநர் டி. என். பாலுவிடம் உதவி இயக்குநராக பணியாற்றி, பல திரைப்படங்களில் இணை இயக்குநராக செயல்பட்டார். 1980களில் இயக்குநராக திகழ்ந்த அவர், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் 70க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார். அவரது முக்கிய படங்களில் வெற்றி, நான் சிகப்பு மனிதன், சட்டம் ஒரு இருட்டறை, நீதிக்கு தண்டனை, முத்தம் உள்ளிட்டவை அடங்கும்.1980களில் இயக்குநர் சந்திரசேகர்–விஜயகாந்த் கூட்டணி அரசியல் கருத்துகளுடன் கூடிய பல வெற்றிப் படங்களை வழங்கியது. விஜயகாந்தை மையமாகக் கொண்டு பல திரைப்படங்களை இயக்கியுள்ள இவர், ரஜினிகாந்தை வைத்து நான் சிவப்பு மனிதன் என்ற ஒரே திரைப்படத்தை மட்டும் இயக்கினார். தனது படங்களில் சிறப்புத் தோற்றங்களிலும் நடித்துள்ளார். 90களின் பிரபல இயக்குநர்களான எஸ். சங்கர், ஏ. வெங்கடேஷ், எம். ராஜேஷ், பொன்ராம் ஆகியோர் இவரிடம் உதவி இயக்குநர்களாக பணியாற்றியுள்ளனர். டூரிங் டாக்கிஸ் என்பது அவர் இயக்கிய 69வது படம் ஆகும்.இவர் ஒரு மேடையில் எம்ஜிஆர் பற்றிய ஒரு தகவலை பகிர்ந்தார். “நான் ஒரு முறை உதவி இயக்குனராக இருந்த போது எம்ஜிஆர் படம் ஒன்றில் பணியாற்றினேன். அப்போது அவர் ஒரு ஷாட் முடித்தவும் நான் ஒன்ஸ் மோர் என்று என்னை அறியாமல் கூறிவிட்டேன், அவரும்  எதுவும் சொல்லாமல் அந்த ஷாட்டை திரும்பவும் நடித்துவிட்டார். பிறகு என்னை அழைத்து நீ பெரிய இயக்குனராக கண்டிப்பாக வருவாய் என்று கூறினார். அடுத்த நாள் ஷூட்டிங் க்கு என்னை அழைப்பதற்கு வண்டி வரவில்லை. நான் ஆட்டோவில் சென்றேன். அங்கு என்னை அவர்கள் உள்ளே அனுமதிக்கவில்லை. பிறகு அவர் என்னிடம் வந்து அடுத்த முறை படம் பண்ணிக்கலாம்…இப்போது வேண்டாம் என்று கூறினார்.” என்று எஸ். ஏ. சந்திரசேகர் ஒரு மேடையில் கூறினார். MGR பழிவாங்குனார் SAC சொன்னது https://t.co/aIZMHgO9TPpic.twitter.com/nowCfVu9MZ

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன