இலங்கை
கொலைகளுக்குப் பின்னால் மறைமுகமான சக்திகள்; ரவி செனவிரத்ன தெரிவிப்பு!
கொலைகளுக்குப் பின்னால் மறைமுகமான சக்திகள்; ரவி செனவிரத்ன தெரிவிப்பு!
நாட்டில் இடம்பெறும் சில கொலைகளின் பின்னணியில் மறைமுக சக்திகள் உள்ளன. அது தொடர்பில் தீவிரமான விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:
நாட்டில் இடம்பெறும் கொலைச்சம்பவங்கள் தனிப்பட்ட விடயம் அல்ல. அதன் பின்னணியில் மறைமுக சக்திகள் உள்ளன. எனவே குற்றச் செயல்களை கட்டுப்படுத்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க விசேட திட்டமொன்றை வகுத்தார். குற்றவாளிகள் தலைமறைவாகி இருப்பதாகக் கூறப்படும் நாடுகளுடன் இருதரப்பு உறவுகளை பலப்படுத்தினார். குறிப்பாக இந்தியா, மலேசியா, தாய்லாந்து, இந்தோனேசியா போன்ற நாடுகளுடன் அவர் இராஜதந்திர ரீதியாக சிறந்த தொடர்புகளைப் பேணி வந்தார். இதன் விளைவாகவே இந்தோனியாவில் வைத்து குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் – என்றார்.
