இலங்கை
யாழில் இருந்து வவுனியா சென்ற பேருந்து விபத்து; இருவர் பலி
யாழில் இருந்து வவுனியா சென்ற பேருந்து விபத்து; இருவர் பலி
கிளிநொச்சி – பரந்தன் பகுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி பயணித்த பேருந்து ஒன்றும், கனரக டிப்பர் ஒன்றும், மோட்டார் சைக்கிளும் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் கிளிநொச்சி தருமபுரம் பகுதியை சேர்ந்த இருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
