சினிமா
அறிவில்ல,அங்கிள்-மிஸ்டர் எனகூப்பிடுவதை அரசியல் நாகரிகமா?விஜய்யை விமர்சித்த நடிகர் ரஞ்சித்!
அறிவில்ல,அங்கிள்-மிஸ்டர் எனகூப்பிடுவதை அரசியல் நாகரிகமா?விஜய்யை விமர்சித்த நடிகர் ரஞ்சித்!
புதுச்சேரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நடிகரும், சமீபத்தில் அரசியல் கருத்துக்கள் மூலம் பரபரப்பை ஏற்படுத்தியவருமான ரஞ்சித், தம்பி விஜய் மீது கடும் விமர்சனம் செய்துள்ளார். விஜய், “நான் உச்சத்தில் இருக்கும்போது அரசியலுக்கு வந்தவன், பிழைப்பு தேடி அரசியலுக்கு வந்தவன் அல்ல” என்று மதுரையில் கூறியதைக் கடுமையாக சாடிய ரஞ்சித், இது யாரைக் குறிக்கிறது எனத் தவிர்க்காமல் கேள்வி எழுப்பினார்.”அந்த வரி யாருக்காக? புரட்சி தலைவர் எம்ஜிஆரா? அம்மாவா? கேப்டன் விஜயகாந்த் சார்? இல்லையென்றால் கமலஹாசனா?” எனக் கேள்விகள் எழுப்பிய அவர், “பிழைப்பு தேடி அரசியலுக்கு வருவது தவறில்லை” என்றார்.மேலும், 2014ல் தேர்தல் பிரச்சாரத்தின் போது விஜய் பிரதமர் மோடியை ஆதரித்ததையும், “படம் ரிலீஸ் ஆகல, அதுக்காகவே வந்தாரா?” எனச் சாடினார். தற்போது மோடி மீது கேள்வி எழுப்பும் விஜய், அப்போ ஏன் துரோகங்கள், சமூக பிரச்சனைகள் பற்றி பேசவில்லையெனவும் ரஞ்சித் கேள்வி எழுப்பினார்.“மிஸ்டர் மோடி, அங்கிள், சொடுக்கு” என கூப்பிடுவது அரசியல் நாகரிகமா?” என வினாவிய நடிகர் ரஞ்சித், “இது வாக்காளனாக எனக்கு வேதனை அளிக்கிறது” என கூறினார். இந்தப் பேச்சுகள் விஜய்யின் அரசியல் பயணத்தில் புதிய விவாதங்களை எழுப்பியுள்ளது.
