இலங்கை
குடும்ப தகராறு ; பிரபல பாடகர் தமித் அசங்க கைது
குடும்ப தகராறு ; பிரபல பாடகர் தமித் அசங்க கைது
இலங்கை பிரபல பாடகர் தமித் அசங்கவை வெல்லவாய பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குடும்ப தகராறு தொடர்பாக வெல்லவாய பொலிஸாருக்கு கிடைத்த புகாரைத் தொடர்ந்து சந்தேகநபர் தமித் அசங்க வெல்லவாய பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
பொலிஸாரால் கைது செய்யப்பட்ட பின்னர், அவர் வெல்லவாய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஒரு லட்சம் ரூபாய் சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
