இலங்கை
புதிய 2000 ரூபாய் நாணய தாள் வெளியீடு!
புதிய 2000 ரூபாய் நாணய தாள் வெளியீடு!
இலங்கை மத்திய வங்கியின் (CBSL) 75வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், நேற்று (29) காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிடம் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க புதிய நினைவு ரூபாய் 2,000 நாணயத் தாளைக் கையளித்தார்.
இந்த ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ள இந்த நினைவுப் பத்திரம், இலங்கை மத்திய வங்கியால் வெளியிடப்படும் ஐந்தாவது நினைவுப் பத்திரமாகும் என்று ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு (PMD) தெரிவித்துள்ளது.
தேசிய வளர்ச்சிக்கான அடித்தளமாக பொருளாதார ஸ்திரத்தன்மையை வலுப்படுத்துவதற்கான மத்திய வங்கியின் உறுதியான அர்ப்பணிப்பை பிரதிபலிக்கும் வகையில், “செழிப்புக்கான ஸ்திரத்தன்மை” என்ற ஆண்டு நிறைவின் கருப்பொருளின் கீழ் இந்த நாணயத் தாள் வெளியிடப்பட்டுள்ளது.
லங்கா4 (Lanka4)
அனுசரணை
