இந்தியா
புதுச்சேரி மின்துறையின் 100% பங்குகள் அதானி குழுமத்திற்கு விற்பனை: இந்தியா கூட்டணி போராட்டம்
புதுச்சேரி மின்துறையின் 100% பங்குகள் அதானி குழுமத்திற்கு விற்பனை: இந்தியா கூட்டணி போராட்டம்
புதுச்சேரி மின்துறை தனியார்மயமாக்கப்படுவதை எதிர்த்து, இந்தியா கூட்டணி கட்சிகள் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் தீவிரப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன. மின்துறையின் 100% பங்குகளை அதானி குழுமத்திற்கு விற்றதாக முன்னாள் முதலமைச்சர் குற்றம்சாட்ட, இதனை அரசு மறுத்து வருகிறது. இந்த விவகாரம் புதுச்சேரி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்தியக் கூட்டணிக் கட்சிகள் புதுச்சேரியில் மின்சாரத் துறையைத் தனியார்மயமாக்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்துப் போராட்டம் நடத்தின. இந்தப் போராட்டத்துக்கு முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தலைமை தாங்கினார்.இந்தப் போராட்டத்தில் பேசிய நாராயணசாமி, புதுச்சேரி மாநில அரசு மின் துறையின் 100% பங்குகளையும் அதானி குழுமத்திற்கு விற்றுவிட்டதாகத் தெரிவித்தார். ஆனால், அமைச்சர் நமச்சிவாயம் மின்சாரத் துறையைத் தனியார்மயமாக்கவில்லை எனக்கூறி முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கிறார். மேலும், இது புதுச்சேரி மக்களுக்குச் செய்யப்பட்ட மிகப் பெரிய துரோகம்.இதன் காரணமாக, முதலமைச்சரும், மின்துறை அமைச்சரும் பதவி விலக வேண்டும். வரும் 8ஆம் தேதி ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்றும், மத்திய அரசை எதிர்த்து ரயில் மறியல் போராட்டமும் நடத்தப்படும்.மின் துறையைத் தனியார்மயமாக்குவதைத் தடுக்கும் வரை இந்தியா கூட்டணி தொடர்ந்து போராடும் என்றும் நாராயணசாமி கூறினார். இந்தக் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சிவா, முன்னாள் அமைச்சர் கந்தசாமி, தி.மு.க. அவைத்தலைவர் எஸ்.பி.சிவக்குமார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் சலீம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி முதன்மைச் செயலாளர் தேவ.பொழிலன் உள்ளிட்ட பல தலைவர்கள் கலந்துகொண்டனர்.பாபு ராஜேந்திரன் புதுச்சேரி
