Connect with us

பொழுதுபோக்கு

முதல் படத்தில் காதலில் விழுந்த நடிகை; 22 வயதில் சினிமாவை விட்டு விலகல்: காதலனின் அப்பா தான் காரணமா?

Published

on

Vijayta Pandit2

Loading

முதல் படத்தில் காதலில் விழுந்த நடிகை; 22 வயதில் சினிமாவை விட்டு விலகல்: காதலனின் அப்பா தான் காரணமா?

சினிமாவை பொருத்தவரை முதல் படம் வெற்றி பெற்றுவிட்டால், அந்த படத்தில் நடித்த ஹீரோ, ஹீரோயின்களுக்கு வாய்ப்புகள் குவியும் என்று சொல்வார்கள். ஆனால், முதல் படம் பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்ற பின்னரும் ஒரு நடிகை தனது 22 வயதிலேயே சினிமாவில் இருந்து விலகிவிட்டார். அவர் யார் தெரியுமா?பாலிவுட் சினிமாவை பொருத்தவரை, ஆண்டுதோறும் புதுமுக நடிகைகள் அறிமுகமாகிக்கொண்டே இருக்கிறார்கள். அந்த வகையில், கடந்த 1981-ம் ஆண்டு வெளியான லவ் ஸ்டோரி படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் தான் நடிகை விஜய்தா பண்டித். ராகுல் ரவய்ல் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில், ராஜேந்திர குமார், அவரது மகன் குமார் கவுரவ் இணைந்து நடித்த இந்த படம், பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.இந்த படத்தின் மூலம் ஒரே இரவில் பாலிவுட் சினிமாவில் பிரபலமான நாயகியாக மாறிய விஜய்தா பண்டித் அடுத்தடுத்து தனக்கு பட வாய்ப்புகள் குவிந்து, நட்சத்திர நடிகையாக உயர்ந்தார். அப்போது முன்னணி நடிகைகளாக இருந்த ஸ்ரீதேவி, மாதுரி தீட்சித் ஆகியோருக்கு, டஃப் கொடுக்கும் வகையில் வெற்றிகளை கொடுத்தாலும், ஒரு சில படங்களுக்கு பின் அவரது திரை வாழ்க்கை சரிவை சந்தித்தது. இதற்கு முக்கிய காரணம் அவரது காதல் தான் என்று கூறப்படுகிறது.முதல் படத்தில் நடிக்கும்போதே, குமார் கவுரவ், விஜய்தா பண்டித் இருவருக்கும் இடையெ காதல் மலர்ந்தாகவும், மகனின் சினிமா வாழ்க்கையை கருத்தில் கொண்டு இந்த காதலுக்கு, ராஜேந்திரகுமார் விரும்பவில்லை என்றும் கூறப்படுகிறது. இதன்பிறகு விஜய்தாவுக்கு பட வாய்ப்புகள் குறைய தொடங்கிய நிலையில், அவர் நடித்த படங்களும் வரிசையாக தோல்வியை சந்தித்துள்ளது,ஒரு கட்டத்தில் சினிமாவை விட்டு விலகிய விஜய்தா பண்டித், 1985-ம் ஆண்டு, மொஹபத் திரைப்படம் மூலம் அவர் மீண்டும் திரையுலகிற்கு வந்தார். ஆனால் அந்த படம் பாக்ஸ்ஆபீஸில் தோல்வியை சந்தித்த நிலையில், 1986-ம் ஆண்டு கார்தீஃப் என்ற படத்தை இயக்கிய இயக்குனர் சமீர் மல்கானை விஜய்தா பண்டித் திருமணம் செய்துகொண்டதாகவும், குறுகிய காலத்தில் இந்த திருமணம் பிரிவில் முடிந்ததாகவும் கூறப்படுகிறது. அதன்பிறகு மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கிய விஜய்தா ஓரளவு வெற்றிப்படங்களை கொடுத்தார்.1986-ம் ஆண்டு, ஜீதே ஹைன் ஷான்சே, தீவானா தேரே நாம் கா, சல்சாலா, ஆகிய படங்களில் நடித்திருந்த இவர் கடைசியாக 1990-ம் ஆண்டு பியார் கா துஃபான் என்ற படத்தில் நடித்திருந்தார். 1990-ம் ஆண்டு இசையமைப்பாளர் ஆதேஷ் ஸ்ரீவஸ்தாவை திருமணம் செய்துகொண்ட விஜய்தா தனது 22 வயதில் சினிமாவில் இருந்து விலகினார். அதன்பிறகு பாடகியாக சில படங்களில் பாடல்களை பாடிய விஜய்தா தற்போது சினிமாவில் இருந்து முழுவதும் விலகிவிட்டார். அவரது கணவர், ஆதேஷ் ஸ்ரீவஸ்தா கடந்த 2015-ம் ஆண்டு மரணமடைந்தார்.தனது முன்னாள் காதலன் குமார் கவுரவ் குறித்து ஒரு பேட்டியில் கூறிய விஜய்தா பண்டித், “நான் நடிக்க விரும்பினேன். நிறைய படங்களுக்கு வாய்ப்புகள் வந்து கொண்டிருந்தன. ஆனால் நான் திருமணம் செய்து கொள்ளலாமா என்று யோசித்துக் கொண்டிருந்தேன். குமார் கவுரவிடம் நான் ஏன் வேலை செய்ய விரும்புகிறேன் என்று கேட்டேன். நாம் திருமணம் செய்து கொள்ள போகிறோம், தான் வேலைக்குச் செல்வதால், எனக்கு அது தேவையில்லை என்று அவர் கூறினார். அவரது தந்தை என்னை படங்களில் இருந்து நீக்குகிறார் என்பது அவருக்குத் தெரியும் என்று கூறியிருந்த்து குறிப்பிடத்தக்கது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன