இலங்கை
மீண்டும் CIDக்கு அழைக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர்
மீண்டும் CIDக்கு அழைக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர்
முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க மீண்டும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.
நாளை (01) காலை 9 மணிக்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகுமாறு சமன் ஏக்கநாயக்கவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இங்கிலாந்து பயணம் தொடர்பாக நடத்தப்படும் விசாரணைக்களுக்கு அமைய வாக்குமூலம் பெறுவதற்காக இந்த அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் சமன் ஏக்கநாயக்க ஏற்கனவே குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகி வாக்குமூலம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
