இலங்கை
செம்மணிப் புதைகுழியில் 12 என்புத்தொகுதிகள் நேற்றும் அடையாளம்;
செம்மணிப் புதைகுழியில் 12 என்புத்தொகுதிகள் நேற்றும் அடையாளம்;
ஒட்டுமொத்த எண்ணிக்கை 200 கடந்தது
அரியாலை செம்மணிப் புதைகுழியில் இருந்து, நேற்று மேலும் 12 என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அரியாலை செம்மணிப் புதைகுழி மீதான இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39ஆவது நாள் நடவடிக்கைகள் நேற்று முன்னெடுக்கப்பட்டன.
இதன்போதே, மேலும் 12 என்புத்தொகுதிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன. அத்துடன், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட என்புத்தொகுதிகளில் 10 என்புத்தொகுதிகள் நேற்று அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
செம்மணிப் புதைகுழியில் இருந்து இதுவரை 209 என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்ட நிலையில், 191 என்புத்தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
நேற்றைய அகழ்வுப்பணிகள் நண்பகல் ஒரு மணியுடன் முடிவுக்கு வந்திருந்தன. எனினும் குறுகிய நேரத்துக்குள் 12 என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
