இலங்கை
செம்மணியில் வரிசையாக பல்வேறு வயதுடையோரின் என்புத்தொகுதிகள் மீட்பு!
செம்மணியில் வரிசையாக பல்வேறு வயதுடையோரின் என்புத்தொகுதிகள் மீட்பு!
அரியாலை-செம்மணிப்புதைகுழியின், ஒரு குறிப்பிட்ட பகுதிக்குள் இருந்து பல்வேறு வயதுடையோரின் என்புத்தொகுதிகள் வரிசையாக மீட்கப்பட்டுள்ளன. பெரியவர்கள், நடுத்தர வயதுடையவர்கள் மற்றும் சிறுவர்கள் ஆகியோரின் என்புத்தொகுதிகளே மிக நெருக்கமாகத் தொடர்புற்றிருந்த நிலையில் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன. அவர்கள் ஒருவருக்கு ஒருவர் தொடர்புடை என்று சந்தேகிக்கப்படுகின்றது. இது தொடர்பான மேலதிக ஆய்வுப் பணிகள் இனிவரும் நாள்கள் இடம்பெறலாம் என்றும் கருதப்படுகின்றது.
