Connect with us

சினிமா

தமிழ் சினிமாவில் முத்திரை பதித்த “ட்ரெண்டிங்”..! Prime Video-வில் இப்டி ஒரு வரவேற்பா.?

Published

on

Loading

தமிழ் சினிமாவில் முத்திரை பதித்த “ட்ரெண்டிங்”..! Prime Video-வில் இப்டி ஒரு வரவேற்பா.?

தமிழ் சினிமா சமீபத்தில் அழுத்தமான கதை அமைப்புகளுக்கும், உணர்வுகளுக்கும் முக்கியத்துவம் அளித்து வரும் ஒரு புதிய பாணியை நோக்கி நகர்கிறது. அந்தப் பாதையில் தனித்துவமான அடையாளத்தை பதித்துள்ளது அறிமுக இயக்குநர் சிவராஜ் இயக்கத்தில், கலையரசன் மற்றும் ப்ரயாலயா முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ள “ட்ரெண்டிங்” திரைப்படம்.இந்த படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியானது. விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற இந்த திரைப்படம், தற்போது அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகி, Top 10 Trending Movies பட்டியலில் 6வது இடத்தை பிடித்துள்ளது.தனது சாதாரண மற்றும் உண்மையான நடிப்பிற்காக பரிசுகளையும் பாராட்டுகளையும் குவித்துக் கொண்டிருக்கும் கலையரசன், இந்த படத்தின் மூலம் மனதைக் கவரும் ஒரு இளைஞனாக திகழ்கிறார். ‘ட்ரெண்டிங்’ திரைப்படத்தின் மிகப்பெரிய ஹைலைட் என்பது இயக்குநர் சிவராஜின் இயக்கத் திறமை. இது அவருடைய முதல் படம் என்றாலும், அருமையான கட்டமைப்புடன், நேர்த்தியான காட்சிகள், மற்றும் கருத்துள்ள வசனங்களுடன் படம் நகர்த்தியது அதிகளவான ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன