Connect with us

இலங்கை

மஹிந்தவை 400 ஆண்டுகள் சிறையில் அடைக்க வேண்டும் ; சரத் பொன்சேகா

Published

on

Loading

மஹிந்தவை 400 ஆண்டுகள் சிறையில் அடைக்க வேண்டும் ; சரத் பொன்சேகா

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை 400 ஆண்டுகள் சிறையில் அடைக்க வேண்டும் என்று பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

ராஜபக்சவின் 2010 ஆட்சிக் காலத்திலேயே கடுமையான ஊழல்கள் இடம்பெற்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார் நிகழ்வு ஒன்றில் பேசிய, முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா அடுத்தடுத்து வந்த இலங்கைத் தலைவர்களையும் விமர்சித்துள்ளார்.

Advertisement

அவர்களுக்கு தேசிய வளர்ச்சிக்கான தொலைநோக்குப் பார்வை இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். சிங்கப்பூரின் லீ குவான் யூ, மலேசியாவின் மகாதீர் முகமது மற்றும் ருவாண்டாவின் ஜெனரல் ஜுவெனல் போன்ற சர்வதேச பிரமுகர்கள், ஊழலுக்கு எதிராக வலுவான நிலைப்பாடுகளை எடுத்ததாக சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

உகாண்டாவிலிருந்து, திருப்பதிக்குப் பறக்க ஒரு தனியார் ஜெட் விமானம் அழைக்கப்பட்ட நிகழ்வையும் சரத் பொன்சேகா நினைவு படுத்தியுள்ளார்.

ராஜபக்ஷவின் தலைமையில், சீனாவுக்கு 2010 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அரச முறை பயணத்தின் போது 65 பேர் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் அதிகாரபூர்வமாக அழைத்துச் செல்லப்பட்டதாக சரத் பொன்சேகா சுட்டிக் காட்டியுள்ளார்.

Advertisement

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் நடவடிக்கைகளையும் சரத் பொன்சேகா விமர்சித்துள்ளார்.

எனினும், அதிகாரிகளைப் பொறுப்புக்கூற வைப்பதில் தற்போதைய நிர்வாகம் வகுத்த முன்னுதாரணத்தை தாம் ஆதரிப்பதாக பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.

ரணில் விக்ரமசிங்கவின் தலைவிதியைப் பார்ப்பது தமக்கு வருத்தமாக இருக்கிறது. அவரே தம்மை அரசியலுக்கு அழைத்து வந்தவர்.

Advertisement

எனினும், அவருடைய கைது விடயத்தில் நடப்பு அரசாங்கம் மேற்கொண்ட முன்னுதாரணத்தை தாம் ஏற்றுக்கொள்வதாக பொன்சேகா கூறியுள்ளார்.

அந்த முன்னுதாரணத்தின் அடிப்படையில், ராஜபக்ஷ போன்ற ஒருவருக்கு சுமார் 400 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று சரத் பொன்சேகா வலியுறுத்தியுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன