இலங்கை
யாழில் தமிழ் மொழிக்கு முன்னுரிமை ; ஜனாதிபதி அநுரவின் செயலால் வியப்பு
யாழில் தமிழ் மொழிக்கு முன்னுரிமை ; ஜனாதிபதி அநுரவின் செயலால் வியப்பு
யாழ்ப்பாணத்தில் இன்றையதினம் (1) ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவினால் திறந்துவைக்கப்பட்டுள்ள குடிவரவு குடியகல்வுத் திணைக்கள பிராந்திய அலுவலகத்துக்கான திரைநீக்க பலகையில் தமிழ் மொழிக்கு முதலிடம் கொடுக்கப்பட்டுள்ளது.
“பொதுமக்களது நிதியை பயன்படுத்தி ……..” “மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் திறந்துவைக்கப்பட்டது.” என குடிவரவு குடியகல்வுத் திணைக்கள அலுவலகத்துக்கான பலகையில் எழுதப்பட்டுள்ளது.
இலங்கையில் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் அரச மொழிகளாக உள்ளபோதும், தமிழுக்கு இதுவரையும் முன்னுரிமை கொடுக்கப்படவில்லை.
இந்நிலையில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவினால் இன்றையதினம் அது மாற்றம் பெற்றுள்ளது.
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இன்று யாழ்ப்பாணம் விஜயம் செய்துள்ளதுடன் பல்வேறு நிகழ்வுகளிலும் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
