Connect with us

பொழுதுபோக்கு

ரஜினிக்கு மகள், கமலுக்கு தங்கை; இந்த நடிகை சசிகுமார், விஷாலுக்கு மாமியார்: யாருனு தெரியுமா?

Published

on

Tamil Cinema Actress thulasi

Loading

ரஜினிக்கு மகள், கமலுக்கு தங்கை; இந்த நடிகை சசிகுமார், விஷாலுக்கு மாமியார்: யாருனு தெரியுமா?

தமிழ் சினிமாவில் அம்மா நடிகையாக நடித்து வரும் ஒரு சில நடிகைகள், ஒரு காலக்கட்டத்தில் முன்னணி நடிகர்களின் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருப்பார்கள். அந்த வகையில் ஒரு நடிகை தான் துளசி. இவர் யார் தெரியுமா?தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் தான் நடிகை துளசி. 1967-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான பாரியா என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர், கமல்ஹாசன் நாயகனாக அறிமுகமாக அரங்கேற்றம் படத்தில் நடித்திருந்தார். அதன்பிறகு தெலுங்கில் நடிக்க தொடங்கிய துளசி, 1982-ம் ஆண்டு வெளியான சகலகலா வல்லவன் திரைப்படத்தில், கமல்ஹாசனின் தங்கையாக நடித்திருந்தார்.தொடர்ந்து 1984-ம் ஆண்டு வெளியான ரஜினிகாந்தின் நல்லவனுக்கு நல்லவன் திரைப்படத்தில் அவரது மகளாக நடித்திருந்த துளசி, படத்தில் அப்பாவை எதிர்த்து தனது காதலரை திருமணம் செய்துகொள்ளும் கேரக்டரில் நடித்தார். ராதிகா நாயகியாக நடித்திருந்த இந்த படத்தை, எஸ்.பி.முத்துராமன் இயக்கியிருந்தார். கமல்ஹாசனுடன் துளசி நடித்த சகலகலா வல்லன் திரைப்படத்தையும் இவர் தான் இயக்கியிருந்தார். அதன்பிறகு, கார்த்தியுடன் தூரத்து பச்சை, சிவாஜியுடன் தாம்பத்யம் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். கடைசியாக 1994-ம் ஆண்டு கமல்ஹாசனுடன் மகாநதி படத்தில் நடித்திருந்த துளசி, அதன்பிறகு கன்னடம் மற்றும் தெலுங்கு படங்களில் கமிட் ஆகி நடித்து வந்தார். 2010-ம் ஆண்டு சசிகுமார் இயக்கத்தில் வெளியான ஈசன் படத்தின் மூலம் தமிழில் ரீ-என்ட்ரி ஆன துளசி, மங்காத்தா, சுந்தரபாண்டியன், ஆதலால் காதல் செய்வீர், பாண்டியநாடு, உள்ளட்ட படங்களில் நடித்திருந்த இவர், பன்னையாரும், பத்மினியும் திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தமிழக அரசின் மாநில விருதை வென்றிருந்தார்.அதன்பிறகு ஆம்பள படத்தில் விஷாலுக்கும் அம்மா கேரக்டரில் நடித்த துளசி, சாகசம், ஆறாது சினம், மெட்ரோ, ரிச்சி, நிமிர், வெந்து தணிந்தது காடு, உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார், குழந்த நட்சத்திரமாக அறிமுகமாகி, கமல்ஹாசனின் தங்கையாக நடித்திருந்த துளசி, ரஜினிகாந்துக்கு மகளாக நடித்திருந்த நிலையில், விஷாலுக்கு மாமியார், அம்மா என இரு வேடங்களிலும் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது இவர் தென்னிந்திய சினிமாவில் முன்னணி கேரக்டர் நடிகையாக வலம் வருகிறார். 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன