Connect with us

பொழுதுபோக்கு

என்னால இதை பாட முடியல, நாளைக்கு வந்து பாடுறேனே… இளையராஜாவிடம் பர்மிஷன் கேட்ட எஸ்.பி.பி: இந்த பாட்டு அவ்ளோ கஷ்டமா?

Published

on

Ilayaraja and SPB

Loading

என்னால இதை பாட முடியல, நாளைக்கு வந்து பாடுறேனே… இளையராஜாவிடம் பர்மிஷன் கேட்ட எஸ்.பி.பி: இந்த பாட்டு அவ்ளோ கஷ்டமா?

எஸ்.பி.பி மற்றும் இளையராஜா இருவரும் தமிழ் சினிமா இசையுலகில் அழியாத இடம் பிடித்தவர்கள். இவர்களின் கூட்டணி எண்ணற்ற வெற்றிப் பாடல்களையும், மனதைக் கொள்ளை கொண்ட இசையையும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வழங்கியுள்ளது. சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக, இவர்களின் கூட்டணி தமிழ் சினிமாவில் ஒரு இசைப் புயலை உருவாக்கியது.இளையராஜாவின் மெல்லிசை மற்றும் எஸ்.பி.பி-யின் வசீகரக் குரல் இரண்டும் இணைந்து பல பாடல்களைக் காலத்தால் அழியாத படைப்புகளாக மாற்றின. “சங்கீத ஜாதி முல்லை” போன்ற கடினமான பாடல்களைக்கூட இளையராஜா இசையமைக்க, அதனை எந்தக் குறையும் இல்லாமல் தன் தனித்துவமான குரலில் பாடி பல பாடல்களை வெற்றிப் பாடல்களாக மாற்றியவர் எஸ்.பி.பி.’காதல் ஓவியம்’ திரைப்படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடல், எஸ்.பி.பி-யின் இசைப் பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது. அந்தப் பாடல் தனக்கு மிகவும் சவாலான ஒன்றாக இருந்ததாக, ஒரு இசை நிகழ்ச்சி ஒன்றிற்கு ஜட்ஜாக சென்றபோது எஸ்.பி.பி தெரிவித்தார். அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது. ஃபேன் ஆஃப் எஸ்.பி.பாலசுப்ரமணியம் யூடியூப் பக்கத்தில் வெளியாகியுள்ளது. அந்த நிகழ்ச்சியில், ஒரு இளம் பாடகர் இப்பாடலை பாடியதைக் கேட்டு, எஸ்.பி.பி, தான் இந்த பாடலைப் பதிவு செய்த போது அனுபவித்த சிரமங்களை நினைவு கூர்ந்தார். அந்தப் பாடலில் உள்ள கர்நாடக இசை இலக்கணங்கள் தனக்கு தெரியாது என்றும், அதன் சுரங்களைச் சரியாகப் பாடுவதற்கு மிகவும் தடுமாறியதாகவும் அவர் கூறினார்.”நான் ஒரு நாள் அவகாசம் கேட்டு, இரவு முழுவதும் பயிற்சி செய்து, மறுநாள் வந்து அந்தச் சுரங்களை மட்டும் பாடி முடித்தேன்” என எஸ்.பி.பி குறிப்பிட்டது, தன் திறமைகளில் உள்ள குறைகளை வெளிப்படையாக ஏற்றுக்கொள்ளும் அவரது பண்பைக் காட்டுகிறது. இந்தப் பாடலை அவருக்கு அளித்ததற்காக அவர் இளையராஜாவுக்கு தனது நன்றியையும் தெரிவித்தார்.  அந்தப் பாடல், ‘காதல் ஓவியம்’ திரைப்படத்தில் இடம் பெற்றது. இசை மேதை இளையராஜா இசையமைத்த இந்தப் பாடலை, அதன் கடினமான சுவரங்களுக்குப் பெயர் பெற்ற எஸ்.பி.பி. பாடியுள்ளார். இந்த பாடலின் உருவாக்கத்தின் போது தனக்கு ஏற்பட்ட சவால்களைப் பற்றிதான் எஸ்.பி.பி. பகிர்ந்துள்ளார். 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன