Connect with us

இலங்கை

ஒரு தசாப்தத்திற்கு பின் இலங்கை வரும் இத்தாலியின் உயர் மட்ட அதிகாரி

Published

on

Loading

ஒரு தசாப்தத்திற்கு பின் இலங்கை வரும் இத்தாலியின் உயர் மட்ட அதிகாரி

இத்தாலியின் வெளிவிவகார மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்கான பிரதி அமைச்சர் மரியா திரிபோடி (Maria Tripodi), உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு நாளை நாட்டிற்கு வரவுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

அவர் எதிர்வரும் 5ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருந்து பல உயர் மட்ட பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

Advertisement

இவ்விஜயமானது, சுமார் ஒரு தசாப்தத்தில், இத்தாலியில் இருந்து இலங்கைக்கு மேற்கொள்ளப்படும் அதி உயர்மட்ட விஜயமாக இது கருதப்படுகின்றது.

தமது விஜயத்தின் போது, ​​பிரதி அமைச்சர் த்ரிபோடி, இலங்கை-இத்தாலி அரசியல் ஆலோசனைகளின் தொடக்க அமர்வில், வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரவுடன் இணை தலைமை தாங்கவுள்ளார்.

இவ்விஜயத்தின் போது அரசியல் ஆலோசனைப் பொறிமுறையை நிறுவுவது குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது

Advertisement

இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் 1952 இல் நிறுவப்பட்டது.

பிரதி அமைச்சர் மரியா த்ரிபோடி பிரதமர் வைத்தியர் ஹரிணி அமரசூரியவை சந்திப்பதுடன், வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்துடன் கலந்துரையாடவுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன