Connect with us

இலங்கை

தே.ம.சக்தி மீது மக்களுக்கு அளவுகடந்த நம்பிக்கை; இளங்குமரன் எம்.பி. தெரிவிப்பு!

Published

on

Loading

தே.ம.சக்தி மீது மக்களுக்கு அளவுகடந்த நம்பிக்கை; இளங்குமரன் எம்.பி. தெரிவிப்பு!

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மீது மக்களுக்கு அளவு கடந்த நம்பிக்கையுள்ளது. படிப்படியாக சட்டம் தன் கடமையைச் செய்யும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் அண்மையில் நடத்திய ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
ரணில் விக்கிரமசிங்க கைதானது எல்லாத் திருடர்களையும் வெளிக்காட்டியுள்ளது.கூட்டுச் சேர்ந்தவர்கள் எல்லாம் படிப்படியாக சிறை செல்லப் போவது அவர்களுக்குத் தெரியும். பாதாள உலகக் குழுக்களை இயக்கியவர்கள் வெளிநாடுகளில் தங்கியிருந்த நிலையில் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். புலனாய்வுப்பிரிவு மற்றும் பொலிஸ் பிரிவை சுயாதீனமாக இயங்கவிட்டிருக்கின்றோம். கடந்த காலம் என்றால் அரசின் அழுத்தம் காரணமாக இவ்வாறு செய்யமாட்டார்கள். இவர்களின் கைதினூடாக பல அரசியல்வாதிகளின் பெயர்கள் தெரியவரவுள்ளன. தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மீது மக்களுக்கு அளவு கடந்த நம்பிக்கையுள்ளது. சட்டம் தன் கடமையைச் செய்யும்- என்றார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன